நீரிழிவை விரட்டுமே கொய்யா!

Image

நிஜமாவே இது உண்மைங்க


பழங்களில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது கொய்யா. ஆனால், இதில் இருக்கும் நலன்களோ எக்கச்சக்கம். ஆம், கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘சி’  சத்து அதிகமுள்ளது.  ஒருநாளைக்கு பரிந்துரைக்கப்படும் நார்ச்சத்தின் அளவில் 12 சதவீதத்தை ஒரு கொய்யாப்பழம் பூர்த்தி செய்கிறது. இது, நீரிழிவு நோயையும் குணப்படுத்துகிறது. இதில் வைட்டமின் ‘ஏ’ இருப்பதால் பார்வைத் திறனுக்கும் நன்கு வழிவகுக்கிறது.
* கொய்யா மரத்தின் பட்டை மற்றும் வேரைக்கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம், சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடை செய்யும்.
* கொய்யா இலையை வாயில் இட்டு மென்று, அப்படியே பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். இலையை, காய்ச்சி கொப்பளித்தால் ஈறு வீக்கம் குணமாகும்.
* சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலக்குடல் பிதுக்கத்திற்கு கொய்யா இலையை அரைத்துப் பற்றுப் போட நல்ல பலன் கிடைக்கும்.
* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் மற்றும் புண் இவற்றின் மேல் தடவினால், அவை விரைவில் குணமாகிவிடும்.
* பசியே எடுக்காதவர்கள் நன்கு பழுத்த கொய்யாப்பழம் ஒன்றைச் சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
* கொய்யா மரத்தின் தளிர் இலைகளை ஒரு கைப்பிடி பறித்து, நன்றாக கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி தேநீர்போல் அருந்தி வந்தால், உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு கட்டுப்படும்.
* கொய்யா மரப்பட்டையை நன்கு சுத்தம் செய்து சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து நீரிலிட்டு நன்றாக கொதிக்கவைத்து கசாயமாக்கி, ஆறியபின் குழந்தைகளுக்கு (5 வயதுக்கு மேற்பட்ட) கொடுக்க வயிற்றுப்போக்கு, இழுப்பு மற்றும் வலிப்பு போன்ற வியாதிகள் குணமாகும்.
* கொய்யா இலையை, தண்ணீரில் காய்ச்சி அரை மணிக்கு ஒரு மடக்கு குடிக்க வாந்திபேதி குணமாகும்.
* இரண்டு கைப்பிடி கொய்யா இலையை லேசாக வதக்கி, இரண்டு டம்ளர் அளவுக்குத் தண்ணீர்விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, நீரை வடிகட்டி அந்த நீரைக் கொண்டு ஆசன வாயில் உள்ள மூலத்தை ஒருநாளைக்கு மூன்று முறை கழுவி வந்தால் விரைவில் மூலம் சுருங்கிப் போகும்.

Leave a Comment