ஆரோக்கியம் இலவசம்.
தினமும் ஒருசில இயற்கைப் பொருட்களை உணவில் சேர்த்து வந்தாலே, ஆரோக்கியம் கிடைத்துவிடும். ஆம், அப்படிப்பட்ட நான்கே பொருட்களின் மகிமையைப் பற்றி மட்டும் இங்கு பார்க்கலாம்.
பூண்டு
* பூண்டில் ஆஸ்பிரின் குணம் உள்ளது. இதனால் இதயக்கோளாறு ஏற்படுவதை தவிர்க்கலாம். பூண்டை உண்டால் உடம்பில் கொழுப்பு கரையும். பூண்டு இரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்தும். இதய தசை மற்றும் இரத்தக்குழாய் தசைகளையும் வலுப்படுத்தும்.
* பூண்டு நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும்
* குழந்தை பெற்ற பெண்கள் தினமும் இரவில் பாலில் சேர்த்து காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகும், வயிற்று உப்புசமும் வராது.
* தசை வலியிருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்து கட்டினால் வலி குறையும்.
* பூண்டின் தோலை சேகரித்து சாம்பிராணிக்கு பதிலாக பயன்படுத்தலாம். அதன் புகைக்கு கொசு, ஈ மற்றும் கரப்பான் அண்டாமல் இருக்கும்.
இஞ்சி
இஞ்சியில் கால்ஷியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், கார்போ ஹைட்ரேட், நிகோடினிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் உள்ளன. இஞ்சி ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. வயிற்றுப்புண் உள்ளவர்கள் இஞ்சியைத் தவிர்க்க வேண்டும். பித்தத்தை குணமாக்கும்.
புதினா
புதினா கீரை இரத்த சுத்திகரிப்புக்குச் சிறந்த மருந்தாகும். தினமும் உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் முகத்தில் பொலிவு உண்டாகி, கரும்புள்ளி மறைகிறது, பருக்கள் வருவது குறைகிறது. முகத்திலுள்ள எண்ணை பசை மறைகிறது. வயிற்று உப்புசம், வயிற்றுப் பிரச்சனைகள் குறையும்.
வெங்காயம்
வெங்காயம் ஜீரணத்திற்கு நல்லது. வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும். இதயத்திற்கு சக்தியை தருகிறது. நரை முடியைத் தடுக்கும், தலையில் வழுக்கை விழாமல் காக்கும், எலும்புக்கு வலிமை அளிக்கும், பித்த நோய், கண் நோய், வாத நோய்கள் குணமாகும்.