என்ன செய்தார் சைதை துரைசாமி – 299
பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமிக்கு ஒரு தனித்துவம் உண்டு. அதாவது, எந்த ஒரு பிரச்னை என்றாலும் அதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எத்தனை வேகம் காட்டுவாரோ, அதே அளவுக்கு எதிர்காலம் பற்றியும் திட்டமிடுவார். குப்பை மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டங்களில் எல்லாம் பொதுவாக மேயர்கள் கலந்துகொள்வதே இல்லை. ஆனால், மேயர் சைதை துரைசாமி இது போன்ற ஆய்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
இன்று குப்பை அகற்றம் சிக்கலாக இருப்பது போன்று, எதிர்காலத்தில் அதிக சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினார். சென்னையில் குப்பை மேலாண்மை குறித்து முழுமையான தகவல்களையும் திரட்டினார்.
.2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு 42 உள்ளாட்சி அமைப்புகள் பெருநகர சென்னையில் இணைக்கப்பட்டன. அதன்படி வீடுகள் , வணிக வளாகங்கள் மற்றும் தெருக்களிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை அளவு 3600 மெட்ரிக் டன்னிலிருந்து 5400 மெட்ரிக் டன்னாக சட்டென அதிகரித்துவிட்டது. இந்தக் குப்பைகள் எல்லாமே கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை வளாகங்களில் மட்டுமே கொட்டப்பட்டு வந்தன.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் சுமார் 269 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு தினமும் 2500 முதல் 2800 மெட்ரிக்டன் குப்பைகளும் 500 மெட்ரிக்டன் கட்டிடக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. சுமார் 35 வருடங்களாக, இங்கு தினமும் குப்பை களையப்பட்டு, நிரவப்பட்டு அதன் மேல் கட்டிடக் கழிவுகள் கொட்டி நிரவப்படுகின்றன. அதேபோல், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு 30 வருடங்களாக தினசரி 2800 முதல் 3000 மெட்ரிக்டன் குப்பைகளும், 500 மெட்ரிக்டன் கட்டிடக்கழிவுகளும் கொட்டப்படுகின்றன.
நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரிக்கும் சூழலில் இரண்டு வளாகங்கள் மட்டும் போதாது என்று மேயர் சைதை துரைசாமி நினைத்தார். இதற்காக புதிய சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
- நாளை பார்க்கலாம்.