சிரிச்சுத்தான் பாருங்களேன்…

Image

சுகர் ஃப்ரீ அல்வா ஜோக்ஸ்

டாக்டர் அல்வான்னு நினைச்சு கிரீஸை எடுத்துத் தின்னுட்டேன்

இனிப்பு இல்லைன்னு தெரியலையா..?

சுகர் ஃப்ரீ அல்வான்னு நினைச்சு தின்னுட்டேன் டாக்டர்

…….


காதலி : உனக்கு தாடிவைத்தால் ரொம்பவும் அழகா இருப்படா…
காதலன்: என்னடி திடீர்னு இப்படிச் சொல்றே… என்னை கழட்டிவிடப் போறியா..?

……………….
பையன்: அம்மா நம்ம எதிர் வீட்டு மாமி பேரு லாவண்யாதானே…
அம்மா: ஆமாம்… அதுக்கு என்ன..?
பையன்: நம்ம அப்பா லூசு மாதிரி அவங்களை செல்லம் செல்லம்னு கூப்பிடுறாரு    

……………………..
கணவன் : இன்னுமா சமையல் ரெடியாகலை… நான் ஹோட்டலுக்குப் போறேன்…
மனைவி : என்னங்க… ஒரு அரை மணி நேரம் டயம் கொடுங்க…
கணவன் : அந்த பயம் இருக்கட்டும், என்ன சமைக்கப் போற..?
மனைவி : அட, நானும் மேக்கப் போட்டு கிளம்பி வர்றேன், ஹோட்டலுக்குப் போகலாம்.
……………………….

ஆசிரியர் : டேய், இந்த உலகத்தை முதன்முதலா சுத்தி வந்தது யாரு..?
மாணவன் : சார், வேலையில்லாம வெட்டியா சுத்தி வர்றவங்களை எனக்குப் பிடிக்காது சார்.

…………………..
காதலி : இன்னைக்கு நைட் நாம ஓடிப்போறதை நினைச்சா எனக்கு ரொம்பவும் பயமா இருக்குது…
காதலன் : ரொம்பவும் பயமா இருந்தா, உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வந்துடேன்

Leave a Comment