’’நீங்க எங்க தாத்தா மாதிரியே பாடுறீங்க…’’
’’ரொம்பவும் சந்தோஷம்… உங்க தாத்தா ரொம்பவும் நல்லா பாடுவாரா, பெரிய வித்வானா?’’
’’ம்ஹும்… அவருக்கும் சுத்தமா பாடவே தெரியாது”
………………..
’’யோவ் சர்வர், அங்கே கஸ்டமர்கிட்ட என்ன தகராறு பண்ணிக்கிட்டு இருக்கிற…?’’
’’பாருங்க முதலாளி, இவருக்கு சிக்கலே இல்லாம ஒரு பிளேட் இடியாப்பம் வேணுமாம்!’’
………………………
’’லவ் பண்ற விஷயம் தெரிஞ்சா எங்க அம்மா கால்ல சூடு வச்சிடுவாங்க…’’
’’சேச்சே, உங்க அம்மா அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க’’
’’நிஜமாத்தான், பாருங்களேன் ஏற்கெனவே மூணு சூடு வாங்கியிருக்கேன்”
…………………..
’’டாக்டர் நான் தினமும் தூங்கும்போது ஒரு வெள்ளைக் குரங்கு கனவுல வருது…’’
’’நீங்க மனநல மருத்துவரைப் பார்த்தீங்களா?’’
’’இல்லே டாக்டர், வெள்ளைக் குரங்கைத்தான் பார்த்தேன்’’
……………………..
’’டாக்டர் சரியாவே தூக்கம் வர்றதில்லை..’
’’ஓ.. தினமும் ராத்திரி தூக்கம் வராம கஷ்டப்படுறீங்களா?’’
’’இல்ல டாக்டர், ராத்திரி நல்லா தூக்கம் வருது””
’’அப்படின்னா, மதியம் தூக்கம் வரலைன்னு சொல்றீங்களா..?’
’’இல்லை டாக்டர். மதியமும் தூங்க முடியுது, ஆனா, காலையிலதான் தூக்கம் வரமாட்டேங்குது’’