ஒருத்தி : முன்னால என்னோட கணவர் ஆபிசில இருந்து பேனா, பென்சில், பேப்பர்னு கொண்டு வரும்போதே நான் கண்டிச்சிருக்கணும்….
மற்றவள்: ஏன், என்னாச்சு…?
ஒருத்தி : ரிசப்ஷன் பொண்ணைக் கொண்டு வந்துட்டாருடி..
……………….
ஆபிசர் : யோவ், பிச்சை கேட்க ஆபீசிற்கா வருவது?
பிச்சைக்காரர் : வீட்டுலதான் கேட்டேங்க. ஐயா ஆபீசுக்கு போயிட்டாங்கன்னு அம்மா சொன்னாங்களே…
………………..
பேராசிரியர் : காலேஜுக்கு ஏன்டா லேட்டு?’’
மாணவர் : பைக் பஞ்சர் சார்!’’
பேராசிரியர் : சரி, பஸ்ல வர்றது…?’’
மாணவர் : அய்யோ, பஸ் வாங்குற அளவுக்கு எனக்கு வசதி இல்லை சார்!
………………..
அவன் : வேலைக்காரியோட நான் சிரிச்சுப் பேசினா, என் மனைவிக்குப் பிடிக்காது.
இவன் : இது பரவாயில்லையே ! என் மனைவியோடு நான் சிரிச்சுப் பேசினா எங்க வேலைக்காரிக்குப் பிடிக்க மாட்டேங்குது..
………………
அவன் : ஏண்டா மச்சான் சோகமா இருக்க?’’
இவன் : இந்த பாழாப்போன ஞாபக மறதியால கஷ்டப்படறேன்!’’
அவன் : என்னடா ஆச்சு?’’
இவன் : என் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணிட்டு, ஞாபக மறதில அவளையே மறுபடியும் கல்யாணம் செஞ்சுட்டேண்டா!
……………………………
சாப்பிட வந்தவர்: என்னய்யா சாம்பார்ல புதுசா பிளேடு கிடக்குது….?
சர்வர் : தாங்ஸ் சார். ஒரு வாரமா இதை தொலைச்சிட்டு தேடிட்டு இருக்கேன் சார்