குட்டி ஜோக்ஸ்
நர்ஸ் : எங்க டாக்டர் ரொம்ப ஸ்மார்ட்… நோயாளிக்கு தொந்தரவு தரக்கூடாதுன்னு அவரே ஆம்புலன்ஸ் வாங்கிட்டார்.
நர்ஸ் : எங்க டாக்டர் ரொம்பவும் ஸ்மார்ட். நோயாளிக்கு கஷ்டம் வரக்கூடாதுன்னு, ஆஸ்பத்திரிக்குப் பின்னாடி சுடுகாடே வைச்சிருக்கார்.
……………….
நோயாளி : “டாக்டர் மயக்க ஊசி போடாம ஆபரேஷன் செய்றீங்க…. ஏன் டாக்டர்…?
டாக்டர் : மயக்க ஊசி போடத் தெரிஞ்சா போட மாட்டேனாப்பா..?
……………………
நோயாளி : டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை…
டாக்டர் : அப்படியா..? , ஆபரேஷன் முடிஞ்சதும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க ?
………………………
கணவன் : நிஜமாதான் சொல்றீங்களா டாக்டர்? என் மனைவியைக் காப்பாத்த வழியே இல்லையா…?
டாக்டர் : யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்கலாம். அது க்காக நான் எத்தனை தடவை திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கறது..?”
…………………..
சிறுவன் : ஹார்ட் அட்டாக் வந்தா என்ன முதலுதவி செய்யணும் டாக்டர்?
டாக்டர்: எதுக்குப்பா கேட்குற..?
சிறுவன் : இன்னைக்கு என்னோட மார்க்கை அப்பாகிட்டே காட்டப் போறேன்.
…………………..
மனைவி : குழந்தை ஏன் அழறான், டாக்டர் ஊசி போட்டுட்டாரா
கணவன் : இல்லே… இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை டாக்டர் பிடுங்கி தின்னுட்டார்…