சிரிக்கச் சிரிக்கச் சிரிக்க

Image

ஜோக்ஸ்


 
மனைவி: “என்னங்க, நான் சிரிக்கும்போது என் கன்னத்தில் விழுற குழியைப் பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது?”
கணவர்: “அவசரப்பட்டு படுகுழியில் விழுந்திட்டேனோன்னு தோணுது”.
————-
பேரன் :  “தாத்தா… குளிர்காற்று அதிகமாக வீசுகிறது. காதில் பஞ்சை வைத்துக்கொள்!”
தாத்தா:  “வைக்கலைனா?”
பேரன்:  “வைக்கலைனா, உங்க மூக்குல பஞ்சை வைக்க வேண்டிருக்கும்”.
————
ஆசிரியர்:  “அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு?”
மாணவன்:  “முதல்ல தொலைச்சது யாரு, சொல்லுங்க சார்?”
————–
தொலைபேசியில்….
 “மேடம், என் மகன் ராமுவிற்கு காய்ச்சல், இன்னைக்கு ஸ்கூலுக்கு வரமாட்டான்”.
 “நீங்க யார் பேசுறது?”
 “நானா… எங்கப்பா ராஜாராம் பேசறேன்”.
————–
போலீஸ்:  “பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?”
டிரைவர்:  “அதான் எனக்கும் புரியல சார். நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்”.

Leave a Comment