என்ன செய்தார் சைதை துரைசாமி 424
மருந்துகள் என்பது நம்பிக்கையின் அடிப்படையிலே செயல்படும் என்பது மேயர் சைதை துரைசாமிக்கு நன்கு தெரியும். இந்த மருந்து போடுங்கள் இரண்டு நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும் என்று டாக்டர் சொன்னால், உடலும் மனமும் இணைந்து சீக்கிரம் காய்ச்சலைக் குணமாக்கிவிடும்.
அப்படிப்பட்ட நம்பிக்கையை மக்களுக்கு நிலவேம்புக் கஷாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறு மூலிகையின் மீது ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே மேயர் சைதை துரைசாமி சிந்தனை செய்து தீவிரமாக செயலாற்றினார்.
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் கஷாயமும் பப்பாளி இலைச்சாறும் ஆற்றலுடன் செயல்படும் என்பதை அரசு அங்கீகரித்து நாளிதழில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி கோரிக்கை வைத்தார்.
உடனடியாக இந்த கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றினார். அதன்படி, ’சித்த மருத்துவத்தின் நிலவேம்புக் கஷாயம் மற்றும் பப்பாளி இலை சாறுக்கு அரசு அங்கீகாரம் இருக்கிறது என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பிரபல நாளிதழ்களில் எல்லாம் அரசு சுகாதாரத் துறை மூலம் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டது.
சித்த மருந்துக்கு அரசு அங்கீகாரம் கொடுத்து முழுப்பக்க விளம்பரம் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தியது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். இந்த செய்தி தமிழகம் முழுக்க அத்தனை பகுதி மக்களுக்கும் காற்றை விட வேகமாகப் பரவியது. இதற்கு மேயர் சைதை துரைசாமியே காரணம் என்பதும் மக்களுக்குப் புரியத் தொடங்கியது.
- நாளை பார்க்கலாம்.