நட்பு என்பதும் கற்பு

ஃப்ரெண்ட்ஷிப் சீக்ரெட் ரூட்ஸ்

ஒரு சிலரை பார்த்தாலே பிடிச்சுப் போகும். அவங்க ஃப்ரெண்ட்ஷிப் கிடைச்சா நல்லா இருக்கும்னு ஆசையா இருக்கும். கவலையே படாதீங்க. ஒரு குறிப்பிட்ட நபரை எப்படி ஃப்ரெண்ட் ஆக்கலாம்னு பார்க்கலாம்.

  • எப்பவும் அவங்க பெயர் சொல்லிக் கூப்பிடுங்கள். அவங்க பேரைக் கேட்கிறதுக்கு எல்லோருமே ஆசைப்படுறாங்க என்பது ஒரு சைக்காலஜி.
  • பேசும்போது அவரது முகத்தைப் பார்த்து, கண்ணைப் பார்த்துப் பேசுங்க. கண்ணைப் பார்த்துப் பேசுறவங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.
  • அவர் பேசும்போது குறுக்க குறுக்க பேசாம, ஆர்வமா கேட்டுக்கிட்டே இருங்க, அவர் பேசுறதுல குறுக்குக் கேள்வி கேளுங்கள். பேசுறதை ரசிச்சுக் கேட்கிறீங்கன்னு தெரிஞ்சாலே இம்ப்ரஸ் ஆயிடுவாங்க.
  • பேச்சுல ஏதாச்சும் முரண்பாடு வந்துச்சுன்னா உடனே அந்த இடத்தை விட்டுப் போயிடுங்க.
  • அவர் முக்கியமான வேலை பார்க்கிற நேரத்துல, சுருக்கமாகப் பேசிட்டு நகர்ந்துடுங்க.
  • அவரோட டிரெஸ், பேசுற ஸ்டைல், சிரிப்பு வித்தியாசமாக இருந்தால் மனதாரப் பாராட்டுங்கள்.
  • அவர் ஆர்வம் காட்டும் விஷயத்தில் கொஞ்சம் கூடுதலாகத் தெரிஞ்சுக்கிட்டு அவரையே அசத்துங்க.  

இப்படியெல்லாம் செஞ்சு பாருங்க. நீங்கள் விரும்பும் நபர் உங்களுக்கு நெருங்கிய நண்பராக மாறிடுவார்.

Leave a Comment