மனிதநேயத்தின் சார்பில் இலவசப் பயிற்சி வகுப்புகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 163

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு மேயர் சைதை துரைசாமி வழங்கிய உயர் கல்விக்கான இலவசக் கையேடு மிகுந்த வரவேற்பு பெற்றது. உயர் கல்விக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதுடன் நின்றுவிடமல், அதற்கு மாணவர்களை தயார் செய்யும் பணியையும் சைதை துரைசாமி மேற்கொண்டார்.

மருத்துவம், பொறியயல், சி.ஏ. போன்ற படிப்புகளில் நுழைய விரும்பும் மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகுப்புகள் மாநகராட்சிப் பள்ளிகளில் நடத்துவதற்கு சைதை துரைசாமி ஏற்பாடு செய்தார். தனியார் பள்ளிகளில் கூட இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படாத நிலையில், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.

அது மட்டுமின்றி, சைதை துரைசாமியின் சொந்த நிதியில் இயங்கிவரும் மனிதநேய அற்க்கட்டளை சார்பில், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பவுண்டேசன் கோர்ஸ் எனப்படும் அடிப்படைக் கல்வியை, அனைத்து மாணவர்களும் பள்ளியில் படிக்கும் போதே அறிந்துகொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். அதோடு, அரசு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. குறிப்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்குப் பயன்படும் பயிற்சி மற்றும் மாடல் தேர்வு புத்தகங்களும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

மனிதநேயம் அறக்கட்டளை நடத்திய பயிற்சி வகுப்புகளில், டி.என்.பி.எஸ்.சி. மற்றும் ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்கு எப்படித் தயாராக வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும், எதை படிக்க வேண்டும், நாளிதழ்களில் எப்படிப்பட்ட செய்திகளைத் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டன. இந்த முயற்சிக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. தனியார் பள்ளி மாணாவர்களுக்குக் கிடைக்காத வாய்ப்புகள் எல்லாம் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்தன என்றால், மேயர் சைதை துரைசாமியின் அன்பும் அக்கறையுமே காரணம்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment