இலவசமாக தளவாடச் சாமான்கள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 335

மனிதநேயம் அறக்கட்டளை மூலம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் உதவிகள் செய்துவரும் மேயர் சைதை துரைசாமி, ஒரே ஒரு விஷயத்தில் மிகவும் உறுதியாக இருப்பார். அதாவது, எந்த ஒரு உதவி செய்வது என்றாலும், அது அவருக்கு முழுமையாக பயன் தருவதாக இருக்க வேண்டும். அதாவது, அறைகுறை உதவி செய்வது சரியானது இல்லை என்பார். அந்த வகையில் தான் சமூகநலக் கூடத்தில் அவரது நடவடிக்கைகளும் அமைந்தன.

வசதியானவர்கள் மற்றும் நடுத்தர மக்கள் அலங்கார மண்டபத்தில் விழா நடத்துவது போன்று ஏழைகளும் விழா நடத்த வேண்டும் என்பதற்காகவே, சமூகநலக் கூடங்களை அழகு படுத்தியும் நவீனப்படுத்தியும் கொடுத்தார்.

மக்களுக்கு சமூகநலக் கூட மண்டபம் மட்டும்தான் வாடகைக்குக்  கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்தது. நிகழ்ச்சிகளுக்குத் தேவையான சமையல் பாத்திரம், சேர், டேபிள் போன்ற எல்லாமே வெளியே வாடகைக்கு எடுக்கும் நிலை இருந்தது. விழா நடத்துபவர்களுக்கு இது பெரும் சுமையாக இருந்தது. ஆகவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து  சமூக நலக்கூடங்களிலும் தளவாடச்  சாமான்கள், சமையல் பாத்திரங்கள்  வாங்குவதற்கு உத்தரவு போட்டார் மேயர் சைதை துரைசாமி.

சமூகநலக் கூடத்தை முன்பதிவு செய்பவர்களுக்கு டெபாசிட் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும். அதோடு தளவாட சாமான்கள்,  சமையல்  பாத்திரங்கள்,  மேசை,  நாற்காலி  மற்றும் திருமணத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும்  இலவசமாக க் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார். இந்த பொருட்களை எல்லாம் வாங்கிய அதே நிலையில்  திருப்பிக்கொடுத்ததும், டெபாசிட் தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளவும் வழி வகை செய்தார்.

மேலும், திருமண மண்டபத்திற்குத் தேவையான கார்ப்பரேஷன் தண்ணீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது. சமூக நலக் கூடங்களில் கிடைக்கும் இலவச வசதிகளைக் கண்டு ஏழை, எளிய மக்கள் மேயர் சைதை துரைசாமியை மனதார பாராட்டுகிறார்கள். சமூகநலக் கூடங்களில் நடைபெறும் ஒவ்வொரு விழாவும், மேயர் சைதை துரைசாமியின் பெயரை நன்றியுடன் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment