• Home
  • சட்டம்
  • நான்கு நாட்டு சட்டம், வாடகைத் தாய் குழந்தைக்குத் தீர்வு

நான்கு நாட்டு சட்டம், வாடகைத் தாய் குழந்தைக்குத் தீர்வு

Image

எம்.நிலா, ஜிஜி லீகல் சர்வீஸ், மதுரை.

வழக்கறிஞர்களுக்கு இருக்கும் தனிச்சிறப்பு, எதிர்பாராத இடங்களில் இருந்து எதிர்பாராத பிரச்னைகளுக்கு வரும் சிக்கல்களைத் தீர்த்து வைக்க வேண்டிய சவாலான பணிகள் வந்து சேரும். இது போன்ற தருணங்களில் சட்டம் சலிப்பூட்டுவதாக இல்லாமல், சுவாரஸ்யமும் சவால் நிரம்பியதாகவும் இருக்கும்.

லண்டன், லக்ஸம்பர்க் ஆகிய நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் காதலில் விழுந்து தம்பதியராக வாழ்ந்துவருகிறார்கள். தங்களுக்கென ஒரு குழந்தை வேண்டுமென கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை வாடகைத் தாயாக ஒப்பந்தம் செய்துகொண்டனர். நார்தெர்ன் சைப்ரஸ் நாட்டின் மருத்துவமனையில் சோதனைக் குழாய் மூலம் அவர் கர்ப்பம் அடைந்தார். அவரது பிரசவம் இந்தியாவில் நடைபெற்றது. குழந்தைக்கும் தாய்க்கும் வழங்கப்பட்டுள்ள ஆவணங்களில் எந்த விதிமீறலும் இல்லை என்பதற்கு லக்சர்பர்க் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது.

இரண்டு மணி நேரத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென அவசரமாக வழிகாட்டுதல் கேட்டனர். ஜிஜி லீகல் சர்வீஸ் மூலம் இதனை சவாலாக எடுத்துக்கொண்டேன். இந்த விவகாரம் இந்தியா, லக்ஸம்பர்க், கிர்கிஸ்தான் மற்றும் நார்தெர்ன் சைப்ரஸ் ஆகிய நாடுகளின் சட்டங்களை ஆய்வு செய்வது சவால் நிறைந்ததாக இருந்தது

தூதரக நடைமுறை, சர்வதேச பயணம், அரசு சட்டங்கள், திட்டங்கள், நீதிமன்ற ஆவணங்கள் ஆய்வுகள் செய்யப்பட்டன. இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் வாடகைத் தாய் சட்டம் மற்றும் சில வழக்குகளும் இணைத்து Surrogacy (Regulation) Act, 2021, Citizenship Act, 1955, மற்றும் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு சட்டங்களின் அடிப்படையில் தெளிவான சட்டத்தீர்வு வழங்கப்பட்டது.  இதன் மூலம் இந்த தம்பதியர் விரும்பிய தீர்ப்பு கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.  

குறைந்த நேரத்தில் முடிக்கவேண்டிய பணி என்றாலும் சவாலாக எடுத்துக்கொண்டு களத்தில் இறங்குகையில் கண்ணுக்கு முன்பு தீர்வுகள் கிடைப்பது நிச்சயம். வழக்கறிஞரின் சேவைக்கும் தேவைக்கும் உள்ள இடைவெளியில் வெற்றி உள்ளது.

Leave a Comment