வீடு வாங்குவதற்கு ஐந்து கட்டளைகள்

வழக்கறிஞர் நிலா சொன்னா கேட்டுக்கோங்க

எந்த ஒரு சொத்துப்பதிவு நடக்கும்போதும் பின்னாடியே பல்வேறு வில்லங்கங்களும் வருகின்றன. இந்த சிக்கலில் மாட்டிக்கொண்டு வெளியே வருவதற்குள் வீடு வாங்கிய மகிழ்ச்சியும் சந்தோஷமும் பறிபோய்விடுகிறது.

அதனால் மோசடிகள், நிலத் தகராறு, போலி பத்திரம், உண்மையான உரிமையாளர்கள் போன்ற சிக்கலைக் கலைவதற்கு ஐந்து ஆவணங்களை பரிசோதனை செய்வது நல்லது. இதன் அடிப்படையிலே சொத்துக்களை வாங்குவது பாதுகாப்பான நடவடிக்கை என்கிறார் வழக்கறிஞர் நிலா.

  1. நிலப் பதிவுகள், உரிமை ஆவணங்கள் முழுமையாக சரி பார்க்கப்பட வேண்டும். குறிப்பாக நிலம் குறித்து நீதிமன்றத்தில் எந்த ஒரு வழக்கு இருந்தாலும், அந்த சொத்தை வாங்கக்கூடாது.
  2. சொத்து விற்பனை செய்பவரின் ஆதார், பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்றவை உண்மையானதுதானா என்பதை சரிபார்க்க வேண்டும். இவை எல்லாமே ஒன்றுடன் ஒன்று லிங்க் ஆகியிருக்க வேண்டும்.
  3. சொத்தின் உண்மையான மதிப்புக்கு முத்திரை வரி செலுத்த வேண்டும். சிறு ஆதாயத்துக்காக சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டுவது தேவையில்லாத சிக்கல் உண்டாக்கும். கருப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பு பிரச்னைக்கு ஆளாகலாம்.  தடுக்கவும் அனுமதிக்கிறது. ஆகையால், பான் கார்டு இல்லாமல், பதிவு முழுமையடையாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
  4. தடையில்லாச் சான்றிதழ் அவசியம். நிலம் நகராட்சி பகுதிக்குள், மேம்பாட்டு ஆணைய மண்டலத்தில் அல்லது தடை செய்யப்பட்ட இடத்தில் இருந்தால், தடையில்லாச் சான்றிதழ் தேவைப்படலாம்.
  5. பதிவு அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன், நிலப் பதிவுகளை கவனமாகச் சரிபார்ப்பதுடன், அனைத்து கட்டணங்களும் வரிகளும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த ஐந்து விஷயங்களில் ஏதேனும் ஒன்றாவது பிரச்னை என்றால் சொத்துப் பதிவு செய்வதை நிறுத்தி, குறையை சரி செய்யுங்கள். அப்போதுதான் சொத்து வாங்கிய மகிச்சியை அனுபவிக்க முடியும்.

  • எம்.நிலா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.

Leave a Comment