என்ன செய்தார் சைதை துரைசாமி – 474
மக்கள் வரிப்பணம் ஒருபோதும் வீணாகக்கூடாது என்பதில் மேயர் சைதை துரைசாமி மிகவும் உறுதியாக இருப்பார். ஏனென்றால், ஏழைகள் தொடங்கி பணக்காரர்கள் வரையிலும் அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் வரி கட்டுகிறார்கள். அந்த வரிப்பணத்தை மிகவும் கஷ்டப்பட்டுத்தான் கட்டுகிறார்கள். எனவே, இந்த பணத்தை முறைப்படி செலவழிக்க வேண்டிய கடமை, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களும், அதிகாரிகளுக்கும் உண்டு என்பதை மேயர் சைதை துரைசாமி அனைவருக்கும் உணர்த்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
மேயர் சைதை துரைசாம்க்கு முந்தைய காலத்தில் நடந்த சில தவறுகளை தணிக்கைத் துறை சுட்டிக்காட்டியிருந்தது. அந்த சீர்கேடுகளுக்கும், சிக்கலுக்கும் உடந்தையாக இருந்த அதிகாரிகளில் பலர் மேயர் சைதை துரைசாமி பதவிக்கு வரும் முன்பே ஓய்வு பெற்றுவிட்டார்கள். அதாவது அப்போது பதவியில் இருந்தவர்கள், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாதுகாப்பாக வழியனுப்பி வைத்திருக்கிறார்கள் அதுமட்டுமின்றி, அதிகாரிகளுக்கு சேரவேண்டிய அனைத்துப் பணப் பயன்களையும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.
முந்தைய காலத்தில் ரூ.1016.79 கோடி மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியிருக்கிறது. ஆனால் இதனை பதவியில் இருந்த மேயரோ, அதிகாரிகளோ கண்டுகொள்ளவே இல்லை. தங்கள் மீது விழுந்த அவதூறுகளை துடைப்பதற்கோ, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
இந்த விஷயத்தில் பல்வேறு சட்டச் சிக்கல்கள் இருந்ததால், சைதை துரைசாமியாலும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாத சூழல் நிலவியது. ஆனாலும், மேயர் சைதை துரைசாமி அமைதியாக இருக்கவில்லை.
- நாளை பார்க்கலாம்.
