வார்த்தைகளே வரம்..!
பிரபலங்கள் கூறிய பொன்மொழிகள், வாழ்க்கைக்கு வழி காட்டுபவை. இங்குள்ள வார்த்தைகள் வாழ்க்கையை வரமாக்குபவை. படித்துப் பாருங்கள், பிடித்துப் போகும்.
உங்கள் காலணிகள் சரியாக பொருந்தும் போது, அதை மறந்து விடுகிறீர்கள்.
- ஜென்
நீ எதனுடன் போராடுகிறாயோ அதுவே தொடர்ந்து வரும். நீ போராடுவதே உனக்குக் கவர்ச்சியான விஷயமாகத் தோன்றிவிடும். பேராசையுடன்,காமத்துடன், கோபத்துடன் மோதினால் அதுவே உன் மனதை ஆக்கிரமிக்கும்.எதனுடன் போராடுகிறாயோ அதன் நினைவுதான் உனக்கு எப்பொழுதும் இருக்கும்.
- ஓஷோ
எந்த ஒரு தெளிவில்லாத கேள்விக்கும், சிறந்த விடை மௌனம் மட்டும்தான். சண்டையில் ஒருவர்தான் வெல்ல முடியும். சமாதானத்தில் இருவரும் வெல்லலாம்.
- புத்தர்
மனிதர்களின் கண்டுபிடிப்பில் மகத்தானது சொற்கள்.அது தானியத்தைப் போன்றது. விளைநிலத்தில் விதைக்கப்படும் போது வளர்ந்து செழிப்பதோடு இன்னொரு விதையாகவும் மாறுகிறது.சொல்லை விதையாக்குவதும் வீணாக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது!
– எஸ்.ராமகிருஷ்ணன்
மன்னிப்பு என்பது வேறொன்றும் இல்லை .ஒரு மலரை நொறுக்கிய பிறகும் அது தருகின்ற நறுமணம் தான் மன்னிப்பு.
- கபீர்
பணம், பதவி , புகழ் மீதான அதீத அக்கறை குறித்து எச்சரிக்கையாக இரு. இதையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்காத ஒரு மனிதனை என்றாவது ஒரு நாள் நீ சந்திக்கலாம். அப்போது நீ எவ்வளவு ஏழ்மையானவன் என்று தெரிந்துகொள்வாய்.
- ருத்யார்ட் கப்ளிங்
தோற்றுப் போதல் என்பது என்ன? பணம் சம்பாதிக்க முடியாமல் போவதா? புகழ் பெற முடியாது போவதா? எண்ணிய இலக்கைஅடைய முடியாது போவதா? தன் எண்ணங்களின்படி வாழ இய்லாமல் போவதா? பிறரின் அனுதாபத்திற்குள்ளாவதா? தோல்வி, தோற்றுப் போதல் என்பதே கற்பனை. எந்த இடத்தையும் அடைய அல்ல… சும்மா நடக்கவே விரும்புகிறேன் என்பவருக்கு தோல்வியும் இல்லை வெற்றியும் இல்லை. அனுபவங்கள் மட்டுமே உண்டு.
- மாலன்.
வாழ்க்கை என்பது ரொம்பவே வேடிக்கையானது. எது தெளிவோ, அது முட்டாள்தனமாகவும், எது முட்டாள்தனமோ, அது தெளிவாகவும் பேசப்படும்.
- பாலகுமாரன்
உன் மீது விழுந்த மழைத்துளியை ஆசிர்வாதமாகப் பார்ப்பதும், அசெளகர்யமாகப் பார்ப்பதும் உன் தேர்வுதான். அப்படியே காயப்படுவதும், காயப்படாமலிருப்பதும் உனது தேர்வுதான். அது உன் கையில்தான் இருக்கிறது என்பதை வாழ்க்கையில் மண்டையில் அடித்துக் கற்றுத் தருகிறது. ஆனாலும், இன்னும் சரியாகக் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம்.
- அரவிந்தர்