• Home
  • அழகு
  • பெண்ணுக்கு முகமே விசிட்டிங் கார்டு

பெண்ணுக்கு முகமே விசிட்டிங் கார்டு

Image

அழகு முக்கியம்

எந்த ஒரு மனிதருக்கும் அவரது முகமே விசிட்டிங் கார்டு. அதிலும் குறிப்பாக பெண்ணுக்கு அவரது முகம் ரொம்பவே முக்கியம். பார்த்தவுடன் பளீச்சென இருக்கவேண்டும் என்றுதான் அத்தனை பெண்களும் ஆசைப்படுவார்கள். ஆனால், முகப்பரு, கரும்புள்ளி, வறட்சியான சருமம் போன்றவை அவ்வப்போது ஏற்பட்டு அழகை கெடுத்துவிடுகின்றன. அதுக்காக பியூட்டி பார்லர்தான் போகவேண்டுமா என்ன? இதோ சிம்பிள் அழகு ரகசியம்.

  • பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாகச் சூடேற்றி, முகத்தில் தடவி மசாஜ் செய்து நன்கு ஊறவைத்தால், முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பிரகாசமாக இருக்கும்.
  • உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ, தோலின் நிறம் பொலிவுபெறும்.
  • பால் பவுடரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து, பின் முகத்தைக் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
  • துளசியை அரைத்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்துக் கழுவினால்,  சருமம் பொலிவோடும் ஆரோக்கித்தோடும் இருக்கும்.
  • குங்குமப்பூவைப் பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து கழுவ, சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.
  • ஓட்ஸை முதல்நாள் இரவிலேயே ஊறவைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து, புளித்த தயிர் சேர்த்து முகத்தில் தடவி வர, முகம் பளபளப்பாவது உறுதி.
  • பயிற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகம் பொலிவு பெறும்.
  • கடலை மாவில் மோர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலரவைத்து கழுவி வர, சருமத்தின் நிறம் மாறும்.
  •  புதினா இலையை அரைத்துச் சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி கால்மணி நேரம் ஊறவைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்கிடும்.
  • நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து, முகத்தைக் கழுவ முகம் பளீச்சாக இருக்கும்.
  • உருளைக்கிழங்கை அரைத்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊறவைத்துக் கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.
  • வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு  முன்னால் தடவி, பின்னர் அரைமணி நேரம் கழித்து கழுவ, சரும பாதிப்புகள் குணமாகும்.
  • ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர்கலந்து அரைத்து கருப்பு நிறத் திட்டுகள் உள்ள இடத்தில் பூசிவர, கரும்புள்ளிகள்  மறைந்துவிடும்.
  • வெள்ளரிக்காயைப் பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து தொடர்ந்து பூசி வர, கண்ணுக்குக் கீழ் உள்ள கருப்பு வளையங்கள் மறைந்துவிடும்.
  • சந்தனப்பொடியைப் பால் அல்லது நீரில் கலந்து, தினமும் முகத்தில் அரைமணி நேரம் தடவி வர, முகப்பரு, தழும்பு மற்றும் கரும்புள்ளி போன்றவை மறையும்.
    இவற்றுடன் சரிவிகித உணவு, சரியான தூக்கம் அவசியம். அப்போதுதான் முகம் எப்போதும் மலர்ந்த மலராக இருக்கும்.

Leave a Comment