சிரிச்சாலும் போதை வரும்

Image

குடிகாரர் ஜோக்ஸ்

’’அவர் பயங்கர குடிகாரராமே..?’’

‘’பின்னே, அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊறுகாய் கம்பெனியே திறந்திருக்காங்களே…”

………………..

’’அந்த பிராந்தி கடையில ஏன் இவ்வளவு பெண்கள் கூட்டம்? ”

‘’ஒரு பிராந்தி பாட்டில் வாங்கினா. ஒரு ஜாக்கெட் பிட் இலவசமாம்…!’’

……………………

ஒரு பாதிரியாரும், ஒருகுடிகார பஸ் டிரைவரும் இறந்தபின் மேலோகம் போனார்கள். பஸ் டிரைவரை மட்டும் சொர்க்கத்திற்கு அனுப்பிய ஆண்டவர், பாதிரியாரை வெளியே காத்திருக்கச் சொன்னார்.

‘’அதெப்படி, நான் உண்மையிலே நன்றாக பிரசங்கம் செய்தேன் என்றார்…””

அதற்கு கடவுள், ‘’நீ பிரசங்கம் செய்தது உண்மைதான். ஆனால், அப்போது எல்லோரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். ஆனால், இவர் பஸ் ஓட்டும்போது எல்லோரும் கடவுளை பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தார்களே” என்றாராம்.

………………………

‘’ஏன் இப்படி குடிக்கு அடிமையா மாறிட்டே…””

’’அப்படி என்ன கவலை?’’

’’வேறென்ன, நான் ரொம்ப குடிக்கிறேன்னுதான்…””

………………………..

‘’எங்கப்பா சொத்து முழுதையும் குடிச்சே அழிச்சுட்டார்…”
’’அடப்பாவமே, உனக்குன்னு எதுவும் வைச்சுட்டுப் போகலியா?’’
’’ஒரு குவார்ட்டர் கூட வைச்சுட்டுப் போகலைன்னா பார்த்துக்கோவேன்…”

Leave a Comment