டிரை பண்ணி பாருங்க
சர்வ வலிக்கு நிவாரணி என்று மின்சாரத் தைலத்தைச் சொல்கிறார்கள். அதாவது தலைவலி, பல்வலி, ஜலதோசம், சுளுக்கு, நெஞ்சு சளி போன்ற எந்த ஒரு அவஸ்தைக்கும் ஒரு சொட்டு மின்சார தைலம் போதும்.
இந்த மின்சாரத் தைலத்தை வீட்டிலேயே தயாரித்துக்கொள்ள முடியும் என்பதுதான் மிகப்பெரிய வரப்பிரசாதம். இதற்கு தேவையான பொருட்கள் என்றால் பச்சை கற்பூரம் – 20 கிராம், புதினா உப்பு – 20 கிராம், ஓம உப்பு – 20 கிராம். அவ்வளவுதான்.
இந்த மூன்று பொருட்களையும் ஒரு சுத்தமான பாட்டிலில் சேர்த்து நன்றாக கலக்குங்கள். அதுவே இயற்கை நிவாரண மருந்தான மின்சாரத் தைலம். தலைவலி, பல்வலி, சுளுக்கு, நெஞ்சு சளி அல்லது ஜலதோசம் ஏற்பட்ட இடத்தில் சிறிது தடவினால் போதும். சில நிமிடங்களில் சூடாகும் உணர்வுடன் வலி குறைந்துவிடும்.
இதில் எந்த ரசாயனமும் இல்லை என்பதால் பக்கவிளைவுகள் இன்றி அனைவரும் பயன்படுத்தலாம். குளிர் காலத்தில் குழந்தைக்கும் முதியவர்களுக்கும் இது அதிகம் பயன்படும்.
