புரோட்டீன் சீக்ரெட்
முட்டை, மாமிசம் போன்றவைகளுக்கு இணையான சத்துக்கள் இயற்கை உணவுகளிலும் இருக்கிறது, எனவே இயற்கை உணவு மட்டுமே உடலுக்குப் போதும் என்று சொல்வது உண்மை அல்ல. குறிப்பாக முட்டைக்கு இணையான புரோட்டீன் வேறு எந்த இயற்கை உணவுகளிலும் இல்லை.
புரோட்டீன் எனப்படும் புரதமானது உடலின் செல்கள் மற்றும் திசுக்கள் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் மிக அவசியமான ஒன்று. புரதம் இல்லையெனில் சரியாக திசு வளர்ச்சி, செல்லுலார் ரிப்பேர் நடக்காது. புரதம் உடலின் சக்தி தேவைகளுக்கும் பங்களிக்கிறது. புரதத்தின் தரம் என்பது அதில் எத்தனை essential amino acids இருக்கும் என்பதை வைத்தே மதிப்பிடப்படும். ஒரு முட்டையில் உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ ஆசிட்களும் தேவையான அளவில் உள்ளது. அதனால்தான் அதை முட்டையை முழுமையான புரோட்டீன் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதேபோல் கல்லீரல் வைட்டமின் ஏ, பி12, இரும்புச்சத்து, புரோட்டீன், ஃபோலேட், சிங்க், செலினியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி வழிகின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்திக்கும், ரத்த நோய் மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கும் அதிகம் உதவுகிறது. மற்ற இயற்கைப் பொருட்களிலும் இந்த சத்துக்கள் இருக்கலாம். ஆனால், அவை எதுவும் முட்டை, ஈரல் அளவுக்கு இல்லை என்பதே உண்மை