சென்னையை நவீனமாக்கும் முயற்சி

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 433

மேலை நாடுகளின் வளர்ச்சியடைந்த நகரங்களுக்கு இணையாக சென்னை நகரையும் முழுமையாக மாற்றியமைக்க ஆசைப்பட்டார் மேயர் சைதை துரைசாமி. அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைமுறைக்கு வந்தது.

தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பத்தின் மூலமாக தெருக்களில் வாகன நிறுத்தம் மேலாண்மை, சுழற்சி முறையில் மிதிவண்டி பகிர்தல், வாகனங்களுக்கு சூரிய சக்தியளிக்கும் நிலையங்கள் நிறுவுதல் போன்றவை ஏற்படுத்தப்படும். திறன்மிகு சிக்னல் அமைப்பு, திறன்மிகு போக்குவரத்து அமைப்பு, பூங்காவில் பசுமை போர்வை அதிகரித்தல், பூங்காவில் கட்டிட அமைப்பு, புல்வெளி எழிலூட்டுதல் நிகழும்.   

மழைநீர் வடிகாலை மேம்படுத்துதலுக்காக தற்போதுள்ள மழைநீர் வடிகால்வாய் நெட்வொர்க் மேம்படுத்தப்படும். மழைநீர் வடிகால்வாய் மூலோபாயஇடங்களில் நிலை சென்சார்கள் நிறுவப்படும். மேலும் ஓவ்வொரு 30 மீ இடைவெளியிலும் மழைநீர் சேகரிப்பு அமைத்தல்

தகவல் தொழில்நுட்ப இணைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல், முக்கிய இடங்களில் வைஃபை அமைக்கப்படும். இதுதவிர நகர கண்காணிப்பு அமைப்பு, டிஜிட்டல் குறியாக்கங்கள் மற்றும் விளம்பர பலகைகள் அமைத்தல்,  மின் ஆளுகை அம்சங்களுக்கான வலைதளங்கள் அமைத்தல் மேம்படுத்தப்படும். நகரின் துப்பரவு மற்றும் இ-கழிப்பறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

24 மணி நேரமும் தண்ணீர் விநியோகத்திற்கு நம்பகமான ஆதாரம் உருவாக்கப்படும். கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை உதாரணமாக இருக்கும். மேலும் நீர் அழுத்தல் மற்றும் தர கண்காணிப்பு மீட்டர் பொருத்தப்படும். சென்சார்களை கொண்டு குப்பை தொட்டிகளை சேகரிப்பது நடைபெறும். வாகன கண்காணிப்பதற்கான அமைப்பு, குப்பை தொட்டிகளுக்கு பூகோள வேலி அமைத்தல், பரிமாற்ற நிலையங்களை நவீனமயமாக்குதல் போன்றவை நிகழும்.

கழிவு மேலாண்மை திட்டங்களான கழிவில் இருந்து எரிபொருள் மற்றும் மின்சாரம், உரம், கழிவு நீர் சுத்திகரிக்கப்படுதல் மற்றும் கட்டிட கழிவுகளை மறுசுழற்சி செய்தல் நடைபெறும். கழிவுநீர் மறுசுழற்சி  மூலம் பூங்காக்கள், சாலை நடுவில் அமைந்துள்ள பூங்கா, தோட்டங்கள் பயன் பெறும்.

முதன்மை விநியோக மின் நிலையங்களில் மைக்ரோ கட்டம் மேலாண்மை அமைப்பு, திறன்மிகு கணக்கிடல் இருக்கும். பொது கட்டிடங்கள் கூரைமேல் சூரிய அமைப்பு நிறுவுதல், ஆற்றல் மிகு எல்.இ.டி. தெரு விளக்குகள் பொருத்துதல். பிரதான சாலைகளில் 250 வாட்ஸ் பல்புகளை120 வாட்ஸ் எல்.ஈ.டி பல்புகளாக மாற்றுதல். பிரதான சாலைகளில் 40 வாட்ஸ் பல்புகளை120 வாட்ஸ் எல்.ஈ.டி பல்புகளாக மாற்றப்படும்.     

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தும் பூர்வாங்கப் பணிகளை சைதை துரைசாமி ஆர்வமுடன் முன்னெடுத்தார். இந்த அனைத்துப் பணிகளும் முடிவுக்கு வரும்போது, சென்னையின் குறிப்பிட்ட பகுதிகள் அதிநவீன நகரமாக மாறிப்போகும் என்பது உறுதி.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment