மெடிக்கல் டிப்ஸ்
நாற்பது வயதைத் தொட்டுவிட்ட பலருக்கும் இரவு நேரத்தில் அல்லது பகலில் எழும்போது கெண்டைக்கால் சதை, கால் விரல்கள், பாதங்களில் தசைப்பிடிப்பு ஏற்படுவதுண்டு. குறிப்பாக கெண்டைக்கால் சதையும் நரம்புகளும் சேர்ந்து கட்டி போன்று இறுகிவிடும். எனவே, படுக்கையில் இருந்து எழுந்தரிக்க முடியாமல், காலை அசைக்க முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாவார்கள்.
கடினமாகிவிட்ட சதைப் பகுதியைத் தொட்டாலே வலிக்கும் என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக நீவி விட்டு, நிதானமாக தடவிக் கொடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்து, அந்த தடிமன் இயல்பு நிலைக்குத் திரும்பும். ஆனாலும் இரண்டு நாட்களுக்காவது அந்த இடத்தில் லேசாக வலி இருக்கும். மேலும், எப்போது வேண்டுமானாலும் அது போன்று வலி வந்துவிடலாம் என்ற பயம் வந்துகொண்டே இருக்கும்.
மருத்துவரிடம் சென்று பார்த்தால், சத்து குறைவாக இருக்கிறது என்று மருந்து எழுதிக்கொடுப்பார். மருந்து சாப்பிடும் வரையில் நன்றாக இருக்கும், அதன் பிறகு மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வரும். இதற்கு ஆயுர்வேதத்தில் எளிமையான ஒரு சிகிச்சை தருகிறார்கள்.
வலது பக்க காலில் கிராம்ப் வந்தால், இடது கையை காதோடு ஒட்டி மேலே தூக்கியபடி கொஞ்ச நேரம் நிற்க வேண்டும். அப்படி நிற்கும்போதே, கிராம்ப் வலி குறையத் தொடங்கிவிடும். முழுமையாக வலி குறைந்த பிறகு கையை இறக்குவது நல்லது. அதேபோல் இடது காலில் கிராம்ப் என்றால் வலது கையை காதோடு ஒட்டி மேலே தூக்க வேண்டும்.