சென்னை பூங்காவில் இ-டாய்லட்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 178

நகரத்து மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையம் என்றால் பூங்காக்கள் மட்டுமே. அதுவும் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எந்த செலவும் செய்யாமல் பொழுது போக்குவதற்கு பூங்காக்கள் உதவுகின்றன. குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டுமின்றி, வியாபார நிமித்தம் சுற்றித் திரிபவர்கள் மற்றும் பயணிகள் இளைப்பாறவும் பூங்காக்களே உதவுகின்றன.

குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு பூங்கா என்பது சொர்க்கம் போன்றது. எத்தனை நேரம் உட்கார்ந்தாலும் அலுப்பு தெரியாது. மகிழ்ச்சியான இடமாக இருக்கும். ஆனால், இங்கு மிகப்பெரிய அசெளகர்யமாக டாய்லட் பிரச்னை இருந்தது. குழந்தைகள் மட்டுமின்றி நோயாளிகள், முதியவர்களும் அடிக்கடி இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டியிருக்கும். பூங்காவில் வசதி இல்லை என்பதால், இதற்காகவே சீக்கிரம் வீட்டுக்குச் செல்லும் அவலம் இருந்தது.

இந்த பிரச்னை மேயர் சைதை துரைசாமியின் கவனத்துக்கு வந்தது. மக்களுக்கு இந்த வசதியை உடனடியாக செய்துகொடுக்க முன்வந்தார். இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து பூங்காவிலும் கழிவறைகள் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அனைத்து பூங்காவிலும் தண்ணீர் வசதியுடன் நவீன கழிவறைகள் கட்டப்பட்டன.

ஒருசில பூங்காவில் இ-டாய்லட் அறிமுகம் செய்யப்பட்டது. சின்னச்சின்ன பூங்கா என்றாலும் அங்கேயும் டாய்லட் வசதி இருக்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டினார். இது, குழந்தைகளை அழைத்து வந்த தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதோடு சிறு வியாபாரிகள், தெருவோர மனிதர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

இப்படி பொதுமக்களின் அவசியத் தேவைகள் ஒவ்வொன்றையும் கவனித்து, அவற்றை உடனடியாக நிறைவேற்றவும் செய்ததால் மேயர் சைதை துரைசாமிக்கு சென்ற இடமெல்லாம் பொதுமக்களிடம் மிகச்சிறந்த வரவேற்பும் பாராட்டும் கிடைத்தன.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment