நெஞ்சு சிலிர்க்குதய்யா
டாக்டர் ராமதாஸ்க்கு தமிழ்க்குடிதாங்கி, பாட்டாளித்தலைவர் என்றெல்லாம் பல பட்டங்கள் இருந்தாலும், தமிழினக் காவலர் என்பது தான் அவருக்குப் பிடித்த பட்டப் பெயர். இதை வலியுறுத்தும் வகையில், ‘கடைகளில் எல்லாம் தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும், பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும்’ என்று அவ்வப்போது அறிக்கை விடுவார்.
அதோடு, அவ்வப்போது தார் சட்டியுடன் கிளம்பி அவரது ஆட்கள் வேறு மொழியில் வைக்கப்பட்ட பெயர்ப் பலகையை அழித்து பரபரப்பைக் கிளப்புவார்கள். தமிழ்க் குடிதாங்கி என்ற வகையில் தமிழுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் கட்சியினருக்கு உத்தரவு போடுவார். ஆனால், அவரது அறிக்கையை அன்புமணி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாரும் படிப்பதே இல்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. அதனாலோ என்னவோ, அவரது பேரன் பேத்திகளுக்கு எல்லாம் சிறப்பான தமிழ்ப் பெயர் வைக்கப்பட்டுள்ளன.
அந்த சிறப்பான தமிழ்ப் பெயர்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம். நேயா டீனா சுகந்தன், அரூத் ஐஸ்வர்யா முகுந்தன், மிளிர் சம்யுக்தா பிரித்தீவன், அகிரா சம்யுக்தா பிரித்தீவன், இகம் சங்கமித்ரா சங்கர் பாலாஜி, அகவ் சமித்ரா நிதர்சன் என்று கொள்ளுப் பெயரக் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி சாதனை படைத்திருக்கிறார்.
கொள்கை, கோட்பாடு என்பதெல்லாம் தொண்டர்களுக்கு மட்டும் தான் என்பதை வாழ்ந்து வடிகாட்டி வரும் தமிழனக் காவலர் அய்யா ராமதாஸ்க்கு ஒரு ஜே போடுங்க.