வழி காட்டுகிறார் வழக்கறிஞர் நிலா
ஊருக்கு வெளியே ஒரு கிரவுண்ட் இடம் வாங்கிப் போட்டிருப்பார்கள். அந்த இடத்தில் அடையாளத்துக்கு கல் வைத்திருப்பார்கள். ஆனால், ஏழெட்டு வருடங்கள் கழித்துச் செல்லும்போது, அந்த இடம் எங்கே இருக்கிறது என்பதே தெரியாமல் போய்விடும். அப்படி கல் ஊன்றிய அடையாளமே இருப்பதில்லை.
இப்படி நிலம் மட்டுமின்றி அபார்ட்மெண்ட் போன்ற சொத்துக்களும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடலாம். இந்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடையாளம் காணும் வழி சொல்லித் தருகிறார் வழக்கறிஞர் நிலா.
இது குறித்து நிலா, ‘’சொத்து வாங்கிய போது ஏற்பட்ட பதிவு (Sale Deed/Title Deed) எங்கு செய்யப்பட்டதோ அந்த இடத்தில் உள்ள பதிவு அலுவலகத்தில் பெயர் அல்லது பதிவு எண்ணின் அடிப்படையில் தகவல் பெறலாம். குறிப்பிட்ட பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்துகள் இருக்கிறதா என்று அவர்கள் தேடித் தர முடியும். அதேபோன்று மாநிலத்தின் நிலத்தடப்புத் தகவல் இணையதளங்களில் உங்கள் பெயர் அல்லது பட்டா எண் மூலம் தேடலாம்:
இந்த சொத்துகள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டிருந்தால், அதை பயன்படுத்தி தேடுவது எளிதாக இருக்கும். ஆகவே, முன்னர் பதிவு செய்தவையாக இருந்தாலும், அதில் ஆதார் எண்ணை இணைப்பது எதிர்காலத்தில் தேடுவதற்கு எளிதாக இருக்கும். அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று பட்டா / சிட்டா / நில தகவல் கேட்கலாம்.
உங்கள் சொத்துக்கு சம்பந்தப்பட்ட சொத்து வரி (Property Tax) ரசீது இருந்தால், அதில் உள்ள சுய அடையாள எண் (Property ID) மூலம் நகராட்சி அல்லது ஊராட்சி இணையதளத்தில் காணலாம். வங்கியில் நீங்கள் கடன் எடுத்திருந்தால், கடன் ஆவணத்தில் சொத்து விபரங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.
உங்கள் சொத்துக்கான ஆவணங்கள் இல்லாமல் இருந்தால், வழக்கறிஞரை அணுகி உங்கள் பெயரில் உள்ள அனைத்து சொத்துகளும், பதிவு விவரங்களும் தேட வழிகாட்டிக் கேட்கலாம்…’ என்கிறார் நிலா.
இது போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு புதுயுகம் தொலைக்காட்சியில், சட்டம் ஒரு வகுப்பறை’ நிகழ்ச்சியில் விடை கிடைக்கிறது.
புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு சட்டம் ஒரு வகுப்பறை என்ற நிகழ்ச்சியை யாழினியுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார் பிரபல வழக்கறிஞர் நிலா. பிரபல வழக்கறிஞர்கள் தினமும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேயர்களின் சந்தேகம் தீர்க்கிறார்கள். போன் செய்தும் சந்தேகம் கேட்கலாம். சட்டத்தில் என்ன சந்தேகம் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்.
ஞானகுரு இணையத்திலும் உங்கள் கேள்விகளை அனுப்பிவையுங்கள். உங்கள் சந்தேகங்களை நிலா நிச்சயம் தீர்த்து வைப்பார்.