ஹெல்த் பத்திரமா பாத்துக்கோங்க
நாம் கண்ணால் பார்க்கும் எல்லாம் உண்மை என்று நம்புகிறோம். எல்லாவற்றையும் பார்க்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால், இது முழு உண்மை அல்ல.
அதாவது, மிகவும் முக்கியம் என்று நினைக்கும் விஷயங்களை மட்டுமே மூளை காட்டுகிறது. உதாரணத்துக்கு பீச்சில் உங்கள் குடும்பத்தினர் அமர்ந்திருப்பதை தூரமாக நின்று பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் குழந்தை பந்து விளையாடுவதை, மனைவி தண்ணீர் குடிப்பதை எல்லாம் பார்ப்பீர்கள். அதேநேரம், எத்தனை பேர் கடந்துசென்றார்கள் என்பதை கவனிப்பதில்லை. இதையே சேஞ்ச் பிளைன்ட்னஸ் என்கிறார்கள்.
நான் பீச்சில் உன்னை பார்த்தேன், நீ வேண்டுமென்றே என்னை கவனிக்கவில்லை என்று அடுத்த நாள் நண்பர் புகார் சொன்னால் அதை நம்பமாட்டீர்கள். உங்கள் நண்பர் பொய் சொல்வதாக நினைப்பீர்கள். உண்மை என்னவென்றால் நீங்கள் குடும்பத்தை மட்டுமே கவனித்தால், உங்களை கடந்துசென்ற நண்பரை கவனிக்கவில்லை. எனவே, மூளையை அப்படியே நம்பாதீங்க பாஸ்.
