பனையூர் கூட்டத்தில் பாடம் எடுத்த விஜய்
விஜய்யின் அரசியல் கொள்கைகளை சீமான் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், இதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று புரியாமல் விஜய் ரசிகர்கள் தவித்தார்கள். ஆகவே, இவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது போன்று இன்று பனையூரில் கூட்டம் நடத்தி பாடம் நடத்தியிருக்கிறார் விஜய். இதில் சீமானை கண்டுகொள்ளாமல் நகருங்கள் நமது எதிரி வேறு ஒருவர் என்று தி.மு.க.வை அடையாளம் காட்டியிருக்கிறார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27ஆம் தேதி நடைபெற்றதை தொடர்ந்து, நேற்று சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 20 பேர் இதில் பங்கேற்ற நிலையில், அவர்களுடன் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆலோசனை நடத்தினார். நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் இரவு 8 மணி வரை நீடித்தது.
இதை தொடர்ந்து விஜய் தலைமையில் இன்று தவெக நிர்வாகிகளிடம் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், ‘த.வெ.க. மீதான விமர்சனங்களுக்கு சமூக வலைதளங்களில் கண்ணியத்தோடு நிர்வாகிகள் பதிலடி கொடுக்க வேணும். தனிநபர் விமர்சனத்தை தவிர்த்துவிட்டு ஆதாரங்களுடன் பதிவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
திராவிடமும் தேசியமும் நம் கொள்கை என்பது அல்ல, நமது கொள்கை மதச்சார்பற்ற சமூகநீதி சித்தாந்தம் என்றும் எதிர்ப்பவர்களை கண்டுகொள்ளாமல் நகருங்கள் என்று சீமானை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். நமது எதிரி தி.மு.க.வும் பா.ஜக.வும் என்பது போன்று 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன்படி, மதசார்ப்பற்ற சமூக நீதி, சமூக நீதிக் கொள்கை, மாநில தன்னாட்சி உரிமை, விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை, கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து தொடங்கக் கோரும் தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
சீமானை குறிவைத்து, ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்பு மொழி கொள்கைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் மீது நிதிச் சுமை திணிப்பு, சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, மின்சார கட்டணத்தை மாற்றியமைப்பு, மதுக்கடைகளை மூட வலியுறுத்தல், உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வலியுறுத்தல், தமிழ்நாட்டின் தொன்மப் பெருமை பாதுகாப்பு, விடுதலை போராட்டத் தியாகிகளுக்கு பெருமை சேர்க்க வலியுறுத்தல், கண்ணயமிகு காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்குதல், முதியோர் நல்வாழ்வை உறுதி செய்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், இயற்கை வளப் பாதுகாப்பு கொள்கை, இஸ்லாமியர் உரிமை, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல், தகைசால் தமிழர் விருதுக்கு வரவேற்பு மற்றும் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தை வரவேற்கும் தீர்மானம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உயிரிழப்பிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தின் மூலம், ‘’திமுக திருமா போன்ற அறிவு இருப்பவர்களிடம் கூட வாதம் செய்யலாம். அறிவற்ற மூடர் கூடத்தோடு வாதம் செய்யாதீர்கள். நான் கடந்து போகிறேன். நீங்களும் கடந்துவிடுங்கள்.’’ என்று கூறியிருக்கிறார்.
சீமானுக்கு சோதனை மட்டுமல்ல, வேதனையும்தான்.