ஃபுட் ஃபிட்னஸ்
உணவே மருந்து என்று சொல்வது உண்மை என்றாலும் நிறைய நோய்களுக்கு உணவே காரணமாகவும் இருக்கிறது. அதோடு, சாப்பிட்டு முடித்ததும் செய்யப்படும் தவறு காரணமாகவும் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து வருகிறது.
சாப்பிட்டு முடித்ததும் ஒரு சொம்பு தண்ணீரை வயிறு முட்ட குடிப்பது பலருடைய பழக்கமாக இருக்கிறது. இது, ஜீரண நீரை நீர்த்துப்போகச் செய்துவிடும். எனவே, சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க வேண்டும். சாப்பிட்டதும் அப்படியே படுக்கையில் விழுந்து குட்டித் தூக்கம் போடுவது நிரைய பேருக்குப் பழக்கமாக இருக்கிறது. இப்படி சாப்பிட்டதும் படுப்பதன் காரணமாக ஜீரணம் நடைபெறுவது சிக்கலாகிறது. எனவே, குறைந்தது அரை மணி நேரமாவது அமர்ந்திருப்பது, நிற்பது நல்லது.
சாப்பிட்டதும் போய் குளிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு. சாப்பிட்டதும் குளிப்பது உடல் சூட்டையும் ஜீரணத்தையும் குழப்பிவிடும். ஆகவே சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துக்குப் பிறகே குளிக்க வேண்டும். வயிறு நிரம்ப சாப்பிட்டதும் ஒரு வாழைப்பழம் அல்லது ஏதேனும் ஒரு ஸ்வீட் சாப்பிடுவதும் நல்ல பழக்கம் அல்ல. பழமும் ஜீரணத்துக்கு இடையூறு செய்யக்கூடியது. எனவே சாப்பிட்டு அரை மணி நேரம் வயிற்றுக்குள் எதையும் திணிக்க வேண்டாம். எப்போதும் முக்கால் வயிறுடன் சாப்பாட்டை முடித்துக்கொள்ளுங்கள், அதுவே ஜீரணத்துக்கு நல்லது.