இதெல்லாம் மூட நம்பிக்கை
அரசியலில் அவ்வப்போது நம்பத் தகுந்தது போலவே சில கதைகள் உலவும். தற்செயல் நிகழ்வுகளை எல்லாம் உண்மை போன்று சித்தரிப்பார்கள். அப்படியொரு பதிவு சமூகவலைதளத்தில் உலவுகிறது.
இது, படிப்பதற்கு சுவாரயஸ்யமாக இருக்கிறது என்றாலும் இதை நம்புவது முட்டாள்தனமானது. ஆகவே, சும்மா படித்துப் பாருங்கள்.
- மோடி 2016ல் ஜெ. வீட்டுக்குப் போய் விருந்து சாப்பிட்டார். ஆறே மாசத்தில் அவுட்.. ஜெயலலிதா மரணத்தின் போது சசிகலா தலையில் கைவைத்து ஆறுதல் சொன்னார். சில நாட்களில் சசி சிறைக்கு சென்றார்.
- பிரதமரானவுடன் பால்தாக்கரேவிடம் ஆசி பெற சென்று அவரைக் கட்டிப்பிடித்தார். ஆறே மாசத்தில் பால்தாக்கரே அவுட்.. கடந்த பிப்ரவரியில் ஈரான் சென்று ஈரான் அதிபரைக் கட்டிப்பிடித்தார். இரண்டே மாதங்களில் ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் அவுட்..
- அமெரிக்கா சென்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை கட்டிப்பிடித்தார். மூன்றே 3 மாதங்களில் டிரம்ப் பதவி அவுட்.. 2021 மார்ச்சில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வததைக் கட்டிப்பிடித்து பிரச்சாரம் செய்தார். ஒரே மாதத்தில் அவர்களுடைய பதவி அவுட்.
- அதிமுகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் ஆட்சி அவுட். அதோடு அதிமுக கட்சியே டமால், டுமீல்.. குறுக்கு வழியில் மணிப்பூரில் ஆட்சியைப் பிடித்தார். இரண்டு வருடமாக மணிப்பூர் பற்றி எரிகிறது.. 2022ல் ஜி7 மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனைக் கட்டிப்பிடித்தார். இரண்டே மாதங்களில் அவரது பிரதமர் பதவி அவுட்..
- பல வருடங்களாக தனித்த மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்துவந்த தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை G20 மாநாட்டில் கட்டிப்பிடித்தார். நான்கே மாதத்தில் தேர்தலில் சிரில் ரமபோசா மெஜாரிட்டி இழந்தார்.. 2020 மேமாதம் ஜப்பான் சென்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை கட்டிப்பிடித்தார். மூன்றே மாதங்களில் அவரது பதவி அவுட்..
- 2023ல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கட்டிப்பிடித்தார். ஒரே மாதத்தில் உக்ரேனுடன் போர் இன்றுவரை புடின் தவித்து வருகிறார்.. இந்தியா வந்த ராஜபக்சே சகோதரர்களை கட்டிப்பிடித்தார். இலங்கை சென்றும் ராஜபக்சே சகோதரர்களை கட்டிப்பிடித்தான்.. இலங்கை மக்களே கலவரம் செய்து ராஜபக்சே சகோதரர்களை நாட்டை விட்டு விரட்டி அடித்தனர்.. 2015ல் சவுதி அரேபியா சென்று அந்நாட்டு மன்னர் அப்துல்லா பின் அப்துல்லாவை சந்தித்துக் கட்டிப்பிடித்தார். மூன்றே மாதங்களில் அவர் அவுட்..
- சிங்கப்பூர் சென்று அந்நாட்டு அதிபர் S.R.நாதனைக் கட்டிப்பிடித்தார். ஆறே மாசம் முன்னர் அவரும் அவுட்.. ரஷ்யா சென்றுவரும் வழியில் அறிவிப்பே இல்லாமல் பாகிஸ்தான் சென்று பிரதமர் நவாஸ்செரிபை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி அவரைக் கட்டிப்பிடித்தார். அதே வருடம் நவாஸ்செரிப் பதவி அவுட். நாட்டைவிட்டே எஸ்கேப்..
- சமீபத்தில் அவரும் அவுட்.. யார் யாரை கட்டிப்பிடித்தார்களோ அவர்களல்லாம் உயிர் பயத்தோடு இருக்கிறார்களாம் பட்டியல் நீண்டுகொண்டே போவதாகத் தெரிவிக்கிறார்கள்.
இப்படி ஒரு தகவல் சமூகவலைதளங்களில் தீயாக பரவி வரும் சூழலிலும் பா.ஜ.க.வினர் இதை ஏனோ சீரிய்ஸாக எடுத்துக்கொள்ளவில்லை. சீக்கிரம் ஏதாச்சும் கவுண்டர் கொடுங்கப்பா.