பணம் பிச்சையாகப் போடாதீங்க

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : பிச்சைக்காரர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம்..?

  • சுலோசனா ராஜேஷ், தேனி.

ஞானகுரு ;

பாத்திரமறிந்து பிச்சை இடு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதாவது பசியில் அழும் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டுமே தவிர, பொம்மை தரக்கூடாது. பிச்சைக்காரருக்கு கையில் இருக்கும் ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாயை தானம் செய்கையில் மனதில் ஒரு மாபெரும் திருப்தியும், பிறருக்கு உதவி செய்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

ஆனால், பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பது ஒரு தவறான அணுகுமுறை. பொதுவாக ஊனமுற்றவர்கள், முதியோர்கள், அனாதைகளே பிச்சை எடுக்கிறார்கள். இவர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வாங்கித்தருவதே உண்மையான கருணையாக இருக்க முடியும். இதையும் தாண்டி நீண்ட காலத் தேவைக்கு வழி காட்டும் வகையில் சிறு உதவிகள் செய்யலாம்.

ஆனால், பணம் கொடுப்பது பிச்சையை ஊக்கப்படுத்தும் செயல். சிலரை பிச்சை எடுக்கவைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு மோசமான கும்பல் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். யாரும் பிச்சையாக பணம் போடவில்லை என்றால் அவர்கள் இந்த அயோக்கியத்தனத்தை தொடர்ந்து செய்ய மாட்டார்கள். எனவே, பிச்சைக்காரர்களுக்கு பண உதவி செய்வதில்லை என்பதில் உறுதியாக இருங்கள்.

பிறருக்கு உதவி செய்வதற்கு ஆசைப்பட்டால் நேரடியாக அனாதை ஆசிரமங்களுக்குச் சென்று பார்வையிட்டு, அவர்களுக்குத் தேவையானவற்றை மட்டும் வாங்கிக்கொடுங்கள். யாரேனும் கல்வித்தொகை கட்டுவதற்குத் தடுமாறுவது தெரிந்தால் உதவி செய்யுங்கள். இதுவே மகிழ்ச்சி.

கேள்வி : இப்போது பிஞ்சிலேயே பழுத்துவிடுகிறார்கள், சின்ன வயதிலே கெட்டுப் போகிறார்களே….?

  • ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.

ஞானகுரு :

சின்ன வயதில் கெட்டுவிட்டார்கள் என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அவர் முதியவராக மாறிவிட்டார் என்று அர்த்தம். ஏனென்றால், நாகரிகம் வளர்ந்த காலத்திலிருந்து மனிதர்கள் இப்படித் தான் அடுத்த தலைமுறையை விமர்சனம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.

Leave a Comment