இவரெல்லாம் கேள்வி கேட்கிறாரே…
கடந்த 30 ஆண்டு கால திருமாவளவனின் அரசியல் வாழ்க்கையில் முதன்முதலாக தன்னுடைய கட்சி உறுப்பினர் ஒருவரால் பெரும் சிக்கலை சந்தித்திருக்கிறார். கட்சிக்குள் ஆதவ் அர்ஜூனாவை கொண்டுவந்த நேரத்திலேயே இரண்டாம் கட்டத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும், அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார் திருமா. அதற்கான பலனை அறுவடை செய்கிறார்.
அதனால்தானோ என்னவோ திருச்சி சூர்யாவெல்லாம் திருமாவளவனைப் பார்த்து கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனா குறித்து திருச்சி சூர்யா, ‘’அர்ஜுன் ரெட்டியின் கருத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பேற்காது என்று கூறும் தோழர் திருமாவளவன் அவர்கள் விடுதலை சிறுத்தை கட்சியில் மட்டும் அர்ஜுன் ரெட்டிக்கு எதற்கு பொறுப்பு என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும்?
நூல் வெளியீட்டு விழாவை ஒளிபரப்பு செய்த எந்த தொலைக்காட்சியிலும் வாய்ஸ் ஆப் காமன் இயக்குனர் என்று அடையாளப்படுத்தவில்லை மாறாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் என்பதே அவரது அடையாளமாக இருந்தது. பிறகு அர்ஜுன் ரெட்டி பேசியதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல. திமுக அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் அளவுக்கு பலவீனமான தலைவர் நான் இல்லை என்று மாறு தட்டிக் கொள்ளும் தோழர் திருமாவளவன் அர்ஜுன் ரெட்டியின் பதவியை பறிக்கவோ அல்லது கட்சியில் இருந்து நீக்கவோ முடியாத அளவுக்கு பலவீனமானவர் என்பதையே அவரது செயல்பாடுகள் உணர்த்துகிறது..’’ என்று கிண்டல் செய்திருக்கிறார்.
இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவருமே ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலும் உயர்நிலை கமிட்டி நோட்டீஸ் அனுப்பி அதன் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என்று சொல்வதெல்லாம் ரொம்பவே ஓவர்.