அறியவேண்டிய உண்மை
இந்த எண்ணெய்தான் என் முடியை இடுப்பு வரை வளர வைத்தது என்ற விளம்பரத்தை நம்பி மக்கள் பல எண்ணெய் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், முடியும் முடிவும் யாருக்கும் கிடைப்பதில்லை.
“ஏன் எனக்கு மட்டும் அந்த மாதிரி முடி வளரவில்லை?” என்று தங்களுக்குள் கேள்வி கேட்டு அடுத்த எண்ணெய் வாங்குகிறார்கள். உண்மை என்னவென்றால், முடி வளர்ச்சியை எண்ணெய் மட்டும் தீர்மானிப்பதில்லை. ஒருவரின் முடியின் அடர்த்தி, எவ்வளவு நீளம் என்பது எல்லாம் பிறவியிலேயே தீர்மானிக்கப்படுகிறது. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் முடி வளர்ச்சியை பாதிக்கக்கூடும்.
புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின் டி போன்ற சத்துகள் குறைந்தால் முடி மெலிந்து உதிரலாம். மனஅழுத்தம், தூக்கமின்மை, சில நோய்கள், சில மருந்துகளும் முடியின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
எண்ணெய் முடியை மென்மையாக்கலாம். வறட்சியைக் குறைக்க உதவலாம். ஆனால், முடியின் அடர்த்தி அல்லது வளர்ச்சி திறனை மாற்றுவதற்கு மருத்துவ ஆதாரம் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
