மருத்துவ அதிசயம்
மனித உடலின் எந்த ஒரு பாகத்தைத் தொட்டாலும் உணர்வு இருக்கும், அழுத்தினால் வலி ஏற்படும். ஆனால், மூளையை மட்டும் கிள்ளினாலும் வெட்டி எடுத்தாலும் வலிக்கவே வலிக்காது. ஏன் தெரியுமா?
பென் நியூரான்கள் எனப்படும் நரம்புகள் புரதத்தின் மூலமாக வலி உணரும் செய்தியை நமது மூளைக்கு அனுப்புகிறது. பிறகு மூளையானது சம்பந்தப்பட்ட பகுதிக்கு வலி உணர்வை அனுப்புகிறது. இப்படிப்பட்ட பென் நியூரான்கள் மூளையில் இல்லை என்பதாலே மூளை வலியை உணர்வதில்லை.
பொதுவாக மனித உடலின் பெரும்பாலான பாகங்கள் 20 வயதிலே வளர்ச்சியை நிறுத்தி விடுகின்றன. ஆனால், மனித மூளையின் வளர்ச்சி நிற்பதில்லை. அதனாலே புதிய மொழி, கம்ப்யூட்டர் நுணுக்கம் போன்றவைகளை 80 வயதிலும் கற்றுக்கொள்ள முடிகிறது. மூளையை பயன்படுத்தாத நபர்களுக்கே ஞாபகமறதி போன்ற பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன.
மனிதர்கள் ஒரு நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிக விஷயங்களை சிந்திக்கிறார்கள். எந்த ஒரு தகவலும் மூளைக்குள் மணிக்கு 418 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுகிறது. மூளையில் உள்ள நரம்பு இழைகளின் நீளம் 1 லட்சத்து 61 ஆயிரம் கிலோமீட்டர். இந்த நரம்பு இழைகள் உந்துவிசைகளை நமது உடலின் அனைத்து பாகங்களிலும் உள்ள அணுக்களுக்கு அனுப்ப உதவுகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மூளை ஒருபோதும் ஒய்வெடுப்பதில்லை. விழித்திருக்கும் நேரத்தைக் காட்டிலும் உறங்கும்போது மூளை கூடுதலாக செயல்படுகிறது. மனித எடையில் மூளை 2 சதவிகிதமே இருக்கிறது. அதேநேரம் மூளையின் மொத்த சக்தியில் 25 சதவிகிதத்தைக் கூட மனிதர்கள் பயன்படுத்துவதில்லை. மனிதர்கள் மூளையில் ஆயிரம் லட்சம் கோடி துணுக்குகள் சேமிக்கவும், அதனை ஞாபகப்படுத்தவும் முடியும். ஆனாலும், மூளையைப் பற்றி இன்னமும் எக்கச்சக்க தகவல்கள் கண்டறியப்பட வேண்டியுள்ளன.