• Home
  • யாக்கை
  • புது தண்ணீரில் குளித்தால் முடி கொட்டுமா?

புது தண்ணீரில் குளித்தால் முடி கொட்டுமா?

Image

சில நாட்கள் வெளியூர் சென்று திரும்பியவர்கள், புதிய இடங்களில் குளித்தவர்கள் எல்லாம் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்வதுண்டு. அதாவது, புதிய தண்ணீரில் குளித்ததால் முடி கொட்டுகிறது என்பார்கள்.

உண்மை என்னவென்றால், தலைமுடியின் வேர் பகுதி வரை தண்ணீர் ஊடுருவுவது இல்லை. ஆகவே, புதிய நீர், உப்புத்தண்ணீர், ஸ்விம்மிங் பூல் தண்ணீர் போன்ற காரணங்களால் முடி கொட்டுவது இல்லை. முடி கொட்டுவதற்கு ஹார்மோன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு முக்கியக் காரணமாக இருக்கிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் உருவாகும் ஸ்ட்ரெஸ் முக்கிய காரணமாக இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு, முதுமை போன்ற காரணங்களாலும் முடி உதிரலாம்.

திடீரென ஒருசிலருக்கு கொத்துக்கொத்தாக முடி கொட்டுவதுண்டு. ஒவ்வாமை, தரமற்ற ஷாம்பூ போன்ற காரணங்களால் இப்படி நிகழலாம். முடி வேர்களில் உண்டாகும் பிரச்னை காரணமாகவே இப்படியொரு சிக்கல் உருவாகும். இப்படிப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவரை குடும்ப மருத்துவர் அல்லது தோல் மருத்துவரை அணுகி தீர்வு காண முயற்சிக்க வேண்டும். பரம்பரைத்தன்மை காரணமாக வழுக்கை ஏற்படுவதுண்டு. இதற்கு கை வைத்தியம், மூலிகை வைத்தியம் போன்றவை பயன் தராது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

Leave a Comment