டாக்டர் சிரிப்பு ஸ்பெஷலிஸ்ட்

Image

டாக்டர் : பாம்பு கடிச்சு அஞ்சு நிமிஷத்திலே உங்க புருஷனுக்கு உயிர் போயிடுச்சா… அதுக்கு வாய்ப்பே இல்லையே.. என்ன செஞ்சீங்க..?

மனைவி : என் புருஷனுக்கு விஷம் தலைக்கு ஏறக்கூடாதுன்னு கழுத்துல ஒரு கயிறு போட்டு டைட்டா கட்டிட்டேன் டாக்டர்.

………

நோயாளி  : என்ன டாக்டர் இது, மருந்து சீட்ல சா.முன் சா.பின் அப்படின்னு போட்டிருக்கீங்க… சாவுக்குப் பிறகு எப்படி சாப்பிட முடியும்..?

டாக்டர் : யோவ், அது சாப்பாட்டுக்குப் பின்

……..

டாக்டர் : நர்ஸ், இந்த நோயாளிக்கா பல்ஸ் எக்குத்தப்பா இருக்குதுன்னு கூப்பிட்டீக…

நர்ஸ் ; ஆமா டாக்டர்.

டாக்டர் : இவர்தான் செத்துப்போய் 2 மணி நேரமாச்சே…

……..

டாக்டர் : அச்சோ, இவரை ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டுவந்திருந்தா கண்டிப்பா காப்பாத்தியிருக்கலாம்…

உறவினர் : என்ன செய்றது டாக்டர்… ஆக்சிடென்ட் ஆகியே அரை மணி நேரம்தானே ஆகுது.

………………..

டாக்டர் : கவலையே படாதீங்க. உங்களை 60 வயசு வரைக்கும் ஜம்முன்னு வாழவைக்க வேண்டியது என் பொறுப்பு…

நோயாளி : டாக்டர் எனக்கு இப்பவே 63 வயசு

……………

நோயாளி : டாக்டர், எனக்கு அவசரமா ஆயிரம் ரூபா கொடுங்க…

டாக்டர் : என்னய்யா, டாக்டர்கிட்டே வந்து பணம் கேட்குறே…

நோயாளி : நீங்கதானே டாக்டர், என்ன அவசரம்னாலும் தயங்காம வாங்கன்னு சொன்னீங்க.

Leave a Comment