கை, கால் மரத்துப் போகிறதா..?

உடலில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பி வைட்டமின்களும் குறையும்போது, அது கடுமையான சோர்வு, தசைப்பிடிப்பு, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு மற்றும் கை, கால்களில் மரத்துப்போதல் போன்ற பல்வேறு உடல்நலப் பாதிப்புகளைத் தோற்றுவிக்கிறது. இந்த தாதுக்கள் குறைபாடு உடல் ரீதியான உள் உறுப்புகள் மட்டுமன்றி, வெளிப்படையான தோற்றத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

குறிப்பாகத் துத்தநாகம் எனப்படும் ஸிங்க் அல்லது இரும்புச் சத்துக் குறைபாட்டால் முடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் வறண்டுபோதல் போன்ற வெளிப்புற அறிகுறிகள் தோன்றுவதுடன், பி வைட்டமின்கள் குறையும் போது வாய் ஓரங்களில் வெடிப்புகள் அல்லது நாக்கின் நிறம் மாறுதல் போன்ற மாற்றங்களும் ஏற்படுகின்றன.

இவை தவிர, திடீரென ஏற்படும் மனநிலை மாற்றம், கவனக்குறைவு மற்றும் வயிறு உப்பசம், நாள்பட்ட மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. எனவே, இதுபோன்ற அறிகுறிகள் தோன்றும் போது, முறையான ரத்தப் பரிசோதனை மூலம் குறைபாட்டைக் கண்டறிந்து, மருத்துவரின் வழிகாட்டுதலோடு ஊட்டச்சத்து சமநிலையை மீட்க வேண்டும்.

Leave a Comment