ஞானகுரு பதில்கள்
கேள்வி : வேதனைகளும் சோதனைகளும் இல்லையென்றால் வாழ்வு எப்படியிருக்கும்..?
- பி.தண்டாயுதபாணி, காந்திநகர்.
ஞானகுரு :
வாலை இழந்த பல்லி வழக்கம்போல் துள்ளியோடுகிறது. விபத்தில் ஒரு காலை பறிகொடுத்த நாய், மூன்று கால்களுடன் எப்போதும்போல் இரை தேடுகிறது. முட்டைகள் திருடப்பட்டது அறிந்த பறவை, அடை காப்பதை விடுத்து இயல்பு வாழ்வுக்குத் திரும்புகிறது. மனிதனைத் தவிர அத்தனை உயிர்களும் வேதனைகளையும், சோதனைகளையும் வாழ்வின் ஒரு பகுதியாகவே பார்க்கின்றன. மனிதன் மட்டுமே அதிர்ந்து நிற்கிறான். கட்டுப்படுத்த முடியாதவைகளை ஏற்றுக்கொள்வதே வாழ்க்கையை சுலபமாக எதிர்கொள்ளும் வழி. வேதனைகளும் சோதனைகளும் இல்லாத வாழ்வு என்பது எந்த உயிர்களுக்கும் கிடையாது, கிடைக்கவும் செய்யாது.












