கவலையை வெல்வதற்கு ஆசையா..?    

சிம்பிள் டிப்ஸ்

எதற்கெடுத்தாலும் கவலைப்படும் மனிதர்கள் இருக்கிறார்கள். கவலை இல்லை என்றாலும் ஏன் நமக்கு கவலை இல்லை என்று வ்ருத்தப்படுகிறார்கள். யாராக இருந்தாலும் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தாலும் கவலையை வெல்வதற்கு இந்த 5 செயல்களைக் கடைப்பிடிக்கத் தொடங்க்னால் போதும்.

ஒன்று. உடல் உழைப்பு தேவைப்படும் அளவுக்கு ஏதேனும் ஒரு கடுமையான வேலை செய்யத் தொடங்குங்கள். அந்த வேலையை முடிக்கும் வரை கவலை உங்களை நெருங்காது.

இரண்டு. அடுத்தவருக்கு அல்லது பொது சேவையில் நேரம் ஒதுக்குங்கள். நோயில் படுத்திருக்கும் உறவினர், நண்பரை சந்திப்பது, பொதுநலச் சங்கங்களுடன் இணைந்து மரம் நடுதல், போக்குவரத்து சீர் செய்தல் போன்ற பணிகள் செய்வது கவலையைப் போக்கிவிடும்.

மூன்று. உங்கள் மீது உண்மையிலே அக்கறை, அன்பு செலுத்துபவரிடம் கவலையைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அடுத்தவரின் ஆறுதலில் பெரும்பாலான கவலை தீர்ந்துபோகும்.

நான்கு. இப்போது கவலைப்படுவதால் நடந்தது அல்லது நடக்கப்போவதை மாற்ற முடியுமா என்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். கவலைப்படுவது எத்தகைய அறியாமை என்பது புரிந்துவிடும்.

ஐந்து. நெருங்கியவர் மரணம், பண நஷ்டம், மிகப்பெரும் தோல்வி போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். அதாவது, எல்லோருக்கும் தோல்வி வரும், எல்லோருக்கும் மரணம் வரும், தவிர்க்க முடியாதவைகளை எதிர்க்க முடியாது என்பதை புரிந்துகொண்டால் கவலை காணாமல் போய்விடும்.

நேற்றைய தோல்வி, நாளைய அச்சம் ஆகியவற்றை விட இன்றைய வாழ்க்கை முக்கியம் என்பதை புரிந்துகொள்பவர்களால் கண்டிப்பாக கவலையை வெல்ல முடியும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment