டக்கர் பியூட்டி டிப்ஸ்
உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகு தருவதற்கும் பால் போன்ற சிறந்தது வேறு எதுவும் இல்லை. ஆம், பால் சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்யும் சிறந்த க்ளென்சிங் என்று சொல்லலாம். முகத்தில் இருக்கும் இறந்த செல்களை சரும பாதிப்பில்லாமல் வெளியேற்றுகிறது. சரும சுத்தம் என்னும் போது அவை முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவற்றையும் வரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது என்பதால் இவை எப்போதும் முகத்துக்கு நன்மை செய்யகூடியது.
மெல்லிய துணி அல்லது பஞ்சை காய்ச்சாத பாலில் நனைத்து சருமத்தை முழுவதும் படரும் படி தேய்க்க வேண்டும். இப்போது பஞ்சை திருப்பி பாருங்கள். எவ்வளவு அழுக்கு அதில் ஒட்டியிருக்கிறது என்பதை கண்டால் தினசரி உங்கள் முகத்தை சுத்தம் செய்வதை தவிர்க்க மாட்டீர்கள். தினமும் செய்து வந்தால் மேக் அப் தேவையில்லை.
பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சக்திவாய்ந்தது. சருமத்துக்கு பொலிவை அளிக்க கூடியது அதனாலேயே இதை இயற்கை மாய்சுரைசர் என்று அழைக்கிறோம். சருமத்தில் ஈரப்பசை இல்லாவிட்டால் அவை வறட்சிக்குள்ளாகும். அதனால் எப்போதும் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உரிய பராமரிப்பு செய்ய வேண்டியிருக்கும்.
காய்ச்சாத பால் 1 தேக்கரண்டி எடுத்து பஞ்சு உருண்டைகளை அதில் 2 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு உங்கள் சருமம் முழுவதும் முகம், கண்கள் சுற்றி, வாய்ப்பகுதியைச் சுற்றி, கழுத்து போன்ற இடங்களில் தடவி கொள்ளுங்கள். இவை காய்ந்ததும் நன்றாக உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மாட்டுப் பால் மட்டுமின்றி தேங்காய் பாலும் சருமத்திற்கும் முடிக்கும் அழகு தரவல்லது. முகத்தில் ஏற்படும் பெரிய பிரச்சனை முக வறட்சி தான். உங்களுக்கும் முகம் வறட்சியாக உள்ளதா? இதனால் பல கிரீம்களையும், சோப்புகளையும், உபயோகப்படுத்தி பிரயோஜனம் இல்லாமல் இருக்கிறதா? தேங்காய்ப்பாலை உபயோகப்படுத்தி பாருங்கள் இது இயற்கையானதும் உடலுக்கும் நல்லதும் ஆகும். இதற்கு தேவையான பொருள்கள்:
தேங்காய் பால் அரை கப்
ரோஸ் நீர் அரை கப்
ரோஜா இதழ் சிறிதளவு
செய்முறை: நாம் குளிக்கும் நீரை சுத்தப்படுத்தி சிறிதளவு சூடுபடுத்திக்கொள்ளவும். அந்த நீரில் தேங்காய் பால், ரோஸ் நீர், மற்றும் ரோஜா இதழ்களை சேர்த்து குளிக்கும் நீரில் கலந்து கொள்ளவும். இதனை தொடர்ந்து குளிக்கும் நீரில் பயன்படுத்தி வந்தால் சருமத்தின் வறட்சியும் சொர சொரப்பான சருமமும் நீங்கி சருமம் மென்மையுடனும் ஈரத்துடனும் இருக்கும்.
சிலருக்கு இளம் வயதிலேயே வயதான தோற்றம் அமைந்துவிடும். அப்படிப்பட்டவர்கள் கொஞ்சம் பாதாமை எடுத்து இரவு முழுவதும் ஊறவைத்து கொள்ளவும் அதனை மறுநாள் எடுத்து தோல் உரித்து அதன் பின் தேங்காய் பால் சேர்த்து நன்கு அரைத்து அதனை முகத்தில் பூசி ஒரு பத்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இளமையாக வைக்கும்.
முக பருக்கள்தான் நிறைய கல்லூரி மாணவிகளின் வில்லனாக இருக்கிறது. முகத்தில் உள்ள பருக்களை எளிய வகையில் நீக்குவதற்காக முதலில் ஓட்ஸை அரைத்து அத்துடன் தேங்காய் பால் சேர்த்து நன்றாக மீண்டும் அரைத்து கொண்டு அதனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் வரை வைத்து சூடான வெது வெதுப்பான நீரில் கழுவி வருவதால் முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் நீங்கும்.
முகம் பொலிவோடு காணப்பட வேண்டுமென்று நினைத்தால், பாதாமை அரைத்து, அதில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
வீட்டிலேயே ஸ்கரப் செய்ய வேண்டுமெனில், ஓட்ஸில் பால் மற்றும் தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, கழுவ வேண்டும். இதனால், சருமத் துளைகளில் தங்கியுள்ள இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
