பத்திரிகை துறையில் விருது வேண்டுமா?

ஏப்ரல் 10 –  புலிட்சர் விருது

உலகம் முழுக்க மக்களுக்கு நோபல் பரிசு, ஆஸ்கர் பரிசு தெரியும். அதேபோன்று புலிட்சர் விருது எதற்காக வழங்கப்படுகிறது என்று தெரியுமா?

பத்திரிகைத் துறையில் சிறந்த கட்டுரை, புகைப்படம் என்று சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படும் விருது.

சரியான தகவல்தான். திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது புகழ்பெற்றது போல், பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையத்துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கெளரவிப்பதற்காக புலிட்சர் விருது  வழங்கப்படுகிறது. நியூயார்க் நகரத்தில் அமைந்திருக்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் 21 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பரிசும் 10,000 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

சரி, எதற்காக இந்தத்தகவல் இப்போது?

ஏனென்றால் புலிட்சர் விருது ஏற்படுத்திய ஜோசப் புலிட்சருக்கு இன்றுதான் பிறந்த நாள். அவர் ஏப்ரல் 10, 1847-ம் ஆண்டு ஹங்கேரியில் பிறந்தார். இவர் இராணுவத்தில் சேர விரும்பினாராயினும், இவரது பலவீனமான உடல்நிலையாலும், கண்பார்வைக் குறைவினாலும்,  இராணுவத்தில் சேரமுடியாமல் போனது. 

பல பத்திரிகைகளில் வேலை பார்த்து அதன்பிறகு சொந்தமாக பத்திரிகை நடத்தி புகழ் பெற்றார். இவர் இறக்கும்போது ஒரு பெரும் தொகையை கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு விட்டுச் சென்றார். இத் தொகையைக் கொண்டு ஜெர்னலிசம் வகுப்பு தொடங்கப்பட்டதுடன் பத்திரிகை துறையில் சாதனை படைப்பவர்களுக்கு புலிட்சர் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Comment