படுத்துக்கொண்டு செல்போன் பார்க்கிறீங்களா..?

கண்ணுக்குள்ளே கலவரம்

தொடர்ந்து அதிக நேரம் செல்போன் பார்க்காதீங்க என்றால் யாரும் கேட்கப் போவதில்லை. பாருங்கள் ஆனால், படுத்துக்கொண்டு பார்க்காதீர்கள். ஏனென்றால் இது கண்களுக்கு ரொம்பவே தொந்தரவு தருகிறது.

படுத்துகொண்டு செல்போன் பார்த்தால் கண்கள் வெகுவேகமாக சோர்வடைந்துவிடும், அதோடு தலைவலி வருவதற்கும் வாய்ப்பு உண்டு. அதோடு இருட்டில் படுத்துக்கொண்டே செல்போன் பார்ப்பவர்களுக்கு தலைவலியுடன் நரம்புகளும் சோர்வடைகின்றன.

எனவே, எழுந்து அமர்ந்தபடி செல்போன் பாருங்கள்.  தொடர்ந்து செல்போன் அல்லது கம்ப்யூட்டர் பார்க்கும் வேலை என்றால் அடிக்கடி கண்களைச் சிமிட்ட வேண்டும். இதனால், கண்களில் ஈரம் படிவதால் கண் எரிச்சலைத் தடுக்க முடியும். பொதுவாக கண்ணுக்கும் செல்போனுக்கு இடையே 40 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும்.

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு முறை கண்களை விலக்கி, 20 அடி தூரத்திலுள்ள ஒரு பொருளை 20 விநாடிகளுக்குப் பார்க்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் கண் பாதிப்பு அடைவதைத் தடுக்கலாம்.

Leave a Comment