என்ன செய்தார் சைதை துரைசாமி – 360
இன்று சென்னையில் கூவம் நதியின் பெரும்பாலான பகுதிகளில் கரைகள் கட்டப்பட்டுள்ளன, அங்கிருந்த குடிசைவாசிகள் வேறு இடங்களுக்குக் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். கழிவு நீர் கலப்பது பெரும்பாலான இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் காரணம், மேயர் சைதை துரைசாமி முன்னெடுப்பில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த சீரமைப்புத் திட்டமாகும்.
இந்த திட்டத்துக்கு புரட்சித்தலைவி ஒப்புதல் கொடுத்ததும் பெருநகர சென்னை மாமன்றத்தில் மேயர் சைதை துரைசாமி பேசிய உரை இன்றும் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்த பேச்சின் முக்கியமான சில பகுதிகளை மக்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
மேயர் சைதை துரைசாமி பேசுகையில், ‘’சென்னை மாநகரம், வேறு எந்த மாநகரும் பெற்றிராத வகையில் சிறிதும் பெரிதுமான 52 நீர்வழிப்பாதைகளை தனக்குள்ளே கொண்டுள்ளது. சென்னை மாநகராட்சியால் 31 நீர்வழிப்பாதைகளும், பொதுப்பணித்துறையால் 21 நீர்வழிப்பாதைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் சென்னையின் பெருமையான கூவம் நதி குறிப்பிடத் தகுந்தது.
கூவம் நதியை சென்னையின் பெருமை என்று நான் சொன்னதைக் கேட்டு பலர் மனதுக்குள் சிரிக்கலாம், சிலர் ஏளனமாய் நகைக்கலாம். ஆனால் உண்மை அதுதான்.
நான் பெருமை என்று கூறுவது இன்றைய கூவம் அல்ல. வள்ளல் பச்சையப்ப முதலியார் அவர்கள் காலையிலும், மாலையிலும் கூவம் நதியிலே குளித்து, சிந்தாதிரிப்பேட்டை, கோமளீஸ்வரன் பேட்டை திருக்கோயிலில் கடவுளை வழிபாடு செய்தார் என்பது வரலாறு! அப்படி நமது பச்சையப்ப முதலியார் போன்ற பெரியவர்கள் போற்றிச் சொன்னார்களே, அந்த கூவத்தைத் தான் நான் பெருமை என்று சொன்னேன். ..’’ என்று சற்று நேரம் நிறுத்தினார் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.