மூளைக்கும் பயிற்சி இருக்கிறதா..?

Image

உடலுக்குப் பயிற்சியளித்து ஆரோக்கியத்தை பாதுகாப்பது போன்று மூளைக்கும் பயிற்சி அளித்தால் சுறுசுறுப்பாக வாழ முடியும் என்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மூளைக்கு என்னென்ன பயிற்சிகள் நல்லது என்று பார்க்கலாம்.

எண்களை மேலிருந்து கீழே சொல்வதும் ஏபிசிடியை தலைகீழாகப் படிப்பதும் மூளைக்கு நல்ல பயிற்சி. அதேபோல், நடை பயிற்சியின் போது பின்புறமாக நடப்பது மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. கண்களை அவ்வப்போது மேலும் கீழும் சுழற்றுவதும், தலையில் வெயில்படுவது போன்று நிற்படும் மூளைக்கு நல்லது. பாதாம் பருப்பு, இலந்தை பழம் பூசணி விதைகள், வெங்காயம் போன்றவை மூளைக்கு பலம் தருகிறது.

எந்த ஒரு புதிய விஷயம் கற்றுக் கொள்வதும் கேரம், டேபிள் டென்னிஸ், செஸ் போன்ற விளையாட்டுகளும் மூளையை அதிகம் சுறுசுறுப்பாக்குகின்றன. தூங்க வேண்டிய நேரத்தில் தூங்கி, உணவு உண்ண வேண்டிய நேரத்தில் உண்டு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மூளைக்கு மிகவும் முக்கியம். இசையை ரசிப்பது, நகைச்சுவை படங்கள் பார்த்து சிரிப்பது, வெளியூர் சுற்றுப்பயணம் போன்றவையும் மூளைக்கு நல்லது.

இசைக் கருவிகள் வாசிப்பது, புத்தகம் வாசித்து அதனை கற்பனையில் நினைத்துப் பார்ப்பது, விளையாடுகளை ஆர்வமாக பார்த்து ரசிப்பதும் மூளைக்கு நல்லதுங்கோ.

Leave a Comment