லொக் லொக் வறட்டு இருமலா..?

வீட்டிலேயே சிம்பிள் தீர்வுகள்

மழை காலங்களில் பெரும்பாலான நபருக்கு டிரை காப் எனப்படும் வறட்டு இருமல் வருகிறது. தொண்டையில் எரிச்சலுடன் தொடர்ந்து இருமல் வந்து கொண்டே இருக்கும். இது அக்கம்பக்கத்தினரையும் அச்சத்தில் ஆழ்த்தக்கூடியது.

பொதுவாக சளியினால் வறட்டு இருமல் வருவதில்லை. வைரஸ் போன்ற தொற்று நோய்,, ஆஸ்துமா, நிமோனியா, காசநோய் போன்ற காரணங்களால் இந்த வறட்டு இருமல் பிரச்சனை வரக்கூடும். இதனால் தொண்டைப் புண், சோர்வு, எரிச்சலுணர்வு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உருவாகிவிடும்.

சூடான மஞ்சள் பால்:

ஒரு டம்ளர் சூடான பாலில், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். தேவைப்படுபவர்கள் மட்டும் தேன் சேர்த்துக்கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். மஞ்சள் என்பது மருத்துவக்குணம் நிரம்பியது. இதிலுள்ள ஆன்டி-பாக்டீரியல் அலர்ஜிக்கு எதிராக செயல்படுகிறது. எனவே வறட்டு இருமல் குணமாக மஞ்சள் பால் உதவுகிறது.

எலுமிச்சை சாறு

இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தினமும் நாலைந்து முறை சாப்பிட்டு வந்தால் உடனே இந்த வறட்டு இருமல் குணமாகும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி வறட்டு இருமலை உண்டாக்கும் கிருமிகளை நோக்கி எதிர்த்து போராடி நோயிலிருந்து விடுதலை தருகிறது.

தேன் வைத்தியம்

5 டேபிள் ஸ்பூன் தேன் எடுத்து கொண்டு அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, அடுப்பில் வைத்து சூடேற்றி, பின்பு அதனை ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.

யூகலிப்டஸ் ஆயில்

ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த வெந்நீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து 15 நிமிடம் ஆவி பிடிப்பது நல்லது. இதன் மூலம் வறட்டு இருமல் நீங்குவதற்கு யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியா மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உதவுகிறது.

அதேபோல் அதேபோல் சிறு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுவது நல்ல நிவாரணமாக உள்ளது. வெங்காயத்தை வதக்கி சாப்பிடுவது அல்லது வெங்காய சாறு குடிப்பதும் வறட்டு இருமலுக்கு நிவாரணம் தரும்.

முயற்சி செய்து பாருங்கள்.

Leave a Comment