ஞானகுரு பதில்கள்
கேள்வி : ஒன்றை தேர்வு செய்யும்போது அல்லது முடிவு எடுக்கும்போது சரியா அல்லது தவறா என்ற குழப்பம் வருகிறது. இதை எப்படி சரி செய்வது..?
- என்.தாமஸ், பாளையங்கோட்டை.
ஞானகுரு :
சிம்பிளான தீர்வு இருக்கிறது. டாஸ் போட்டு முடிவு செய்யலாம். நாணயத்தை சுண்டிப் போடுங்கள உள்ளங்கையில் பிடியுங்கள். உடனே கையைத் திறக்காதீர்கள். உங்கள் மனம் தலை வரவேண்டும் என்று விரும்புகிறதா அல்லது பூ விழ ஆசைப்படுகிறதா என்று யோசித்துப் பாருங்கள். இப்போது மனம் விரும்பும் முடிவு எடுங்கள். டாஸ் போட்ட கையைத் திறந்துபார்க்காமல் காசை பைக்குள் போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெற்றி, தோல்வி எது கிடைத்தாலும் மனம் விரும்பிய வகையில் முடிவு எடுத்தோம் என்ற மகிழ்ச்சி நிச்சயம் கிடைக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.












