பிள்ளைகள் வீட்டை விட்டு நகர்வதே இல்லையா?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : சேட்டை செய்யும் குழந்தையை திருத்தவே முடியவில்லை.? வெளியில் சென்றும் விளையாட மறுக்கிறான்.. என்ன செய்வது?

  • கே.புஷ்பம், வேலூர்.

ஞானகுரு :

சர்க்கஸில் யானை ஒரு ஸ்டூலில் ஏறி நிற்கிறது. புலி தீ வளையத்துக்குள் பாய்ந்து வெளியே வருகிறது. டால்பின் பந்து விளையாடுகிறது. இப்படி மிருகங்களும், பறவைகளும் மனிதன் சொல்வதை எல்லாம் கேட்கின்றன. ஆனால், பிள்ளை நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால், நீங்கள் சரியாக வளர்க்கவில்லை என்றே அர்த்தம்.

குழந்தை சேட்டை செய்வதை குறும்புத்தனம் என்று கொண்டாடக்கூடாது. சின்னப் பிள்ளை அப்படித் தான் செய்யும் என்று சமாதானம் செய்யக் கூடாது. சேட்டை செய்யும் போது கண்டிப்பும் எல்லை மீறும் போது தண்டிக்கவும் வேண்டும். மீண்டும் சேட்டை செய்தால் தண்டனை கிடைக்கும் என்பது பிள்ளைக்குத் தெளிவாகப் புரிந்தால் மட்டுமே அடங்குவார்கள்.

வீட்டை விட்டு பெரியவர்கள் வெளியே வந்தால் தான் பிள்ளைகளும் விளையாட வருவார்கள். பிள்ளையை பார்க், பீச் என்று அழைத்துச் செல்லுங்கள். வீட்டு வாசலில் அக்கம்பக்கத்துப் பிள்ளைகளைக் கூட்டி வைத்து நீங்களும் விளையாடுங்கள். மாற்றம் முதலில் பெற்றோரிடம் இருந்து தொடங்க வேண்டும். தங்களை தொந்தரவு செய்யாமல் பிள்ளை மட்டும் வெளியே போய் விளையாட வேண்டும் என்று நினைத்தால், அது நடக்காது. ஏனென்றால் வெளியில் விளையாடுவதை விட வீட்டுக்குள் இருப்பதே சுகம் என்பதை பிள்ளைகள் உணர்ந்துவிட்டார்கள்

Leave a Comment