நாத்திகர்களுக்கு ஒரு நாள் தேவையா..?

கடவுள் சிந்தனை

கடவுள் என்பதற்கு எளிய இலக்கணம் உள்ளது. அதாவது இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிப்பவர் கடவுள். மனிதர்கள் படைப்பு, வாழ்க்கை, அழிவு போன்ற எல்லாமே கடவுள் செயல். இதற்குத் துணையாக சொர்க்கம், நரகம், முற்பிறவி, மறுபிறவி என ஏகப்பட்ட கருத்துகள் உள்ளன. இவற்றை ஏற்றுக்கொள்பவர்கள் ஆத்திகர்கள், இவற்றை மறுப்பவர்கள். நாத்திகர்கள்.

உலகில் கிட்டத்தட்ட 4000 மதங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ள. ஒவ்வொரு மதமும் புத்தஜெயந்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று கொண்டாடுகின்றன. நாத்திகர்களுக்கும் அவர்களுடைய கொள்கையைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டதே, உலக நாத்திகர் நாள். அமெரிக்க நாத்திக சங்கத்தினரால் 2003-ஆம் ஆண்டு முதல் மார்ச் 23ம் தேதி நாத்திகர் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.  முன்னெடுக்கப்பட்டது தான் உலக நாத்திகர் நாள்.

இப்படி ஒரு கொண்டாட்டத்தை பெரும்பாலான நாத்திகர்கள் ஏற்கவில்லை. இப்படி ஒரு கொண்டாட்டமே முட்டாள்தனத்துக்கு வழிவகை செய்துவிடும் என்று நிராகரிக்கிறார்கள். ஆனாலும் சிலர், நாத்திகத்தைப் பரப்புவதற்கு இப்படி ஒரு நாள் இருப்பது நல்லது என்று கருத்து சொல்லி, கொண்டாடி வருகிறார்கள்.

இந்த உலகில் முழு நாத்திகர்களும் ஆத்திகர்களும் இல்லை என்பதே உண்மை. எல்லா மனிதருக்கும் கடவுள் இருப்பின் மீது ஏதேனும் ஒரு காலகட்டத்தில் சந்தேகம் வருகிறது, அதேபோல் ஏதேனும் ஒரு காலகட்டத்திலும் நம்பிக்கையும் வருகிறது.

எப்படி என்றாலும் கடவுள் நம்பிக்கையால் மனிதருக்கு நிகழக்கூடியது எதுவும் இல்லை. மதம் ஆறுதல் தருகிறது, நம்பிக்கை தருகிறது என்பது உண்மையில்லை. ஏனென்றால், போலி நம்பிக்கையும் போலி மனிதர்களும் கூடுதல் துன்பத்தையே தரும்.

Leave a Comment