மார்பகப் புற்று நோய் பெண்களுக்கான நோய் என்றால், ஆண்களுக்கு மட்டுமே வரும் நோய் புரோஸ்டேட் புற்றுநோய்.
புரோஸ்டேட் என்பது சிறுநீர்க்குழாயை சுற்றியுள்ள ஆண் இனப்பெருக்க சுரப்பி. இந்த சுரப்பியில் புற்று நோய் உருவாகும்போது நிணநீர் மண்டலத்தின் மூலம் எலும்புகள் மற்றும் மற்ற உறுப்புகளுக்கும் எளிதாகப் பரவுகிறது.
நீண்ட நேரம் நிற்கவோ அல்லது நடக்கவோ முடியாத நிலை ஏற்படுவதும் கால்கள் திடீரென அசைக்க முடியாமல் போவதும் புரோஸ்டேட் புற்றுநோயின் அறகுறிகளாக இருக்கிறது. மூட்டுக்களில் வீக்கம், விறைப்புத்தன்மை ஏற்படுவதும் இடுப்பு, தொடை அல்லது கீழ் முதுகுப் பகுதிகளில் தாங்கமுடியாத வலி வருவதும் இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுவதும், மிகவும் குறைவான அளவில் சிறுநீர் வெளியேறுவதும், சிறுநீர் வலியுடன் வெளியேறுவதும், ரத்தம் கலந்த விந்துவும் அறிகுறிகளாக இருக்கின்றன. எனவே, இதுபோன்ற அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை சந்தியுங்கள், உடனடி நிவாரணம் பெறுங்கள்.