என்ன செய்தார் சைதை துரைசாமி – 389
சென்னை பெருநகர மேயர் மேம்பாட்டு நிதி என்பது வெறுமனே 50 லட்சம் ரூபாயாக இருப்பதைக் கண்டு மேயர் சைதை துரைசாமி பேரதிர்ச்சி அடைந்தார். 200 வார்டுகளைக் கொண்ட பெருநகர சென்னைக்கு இந்த நிதியால் எந்தவொரு நன்மையும் செய்வதற்கு வழியே இல்லை என்பதை உணர்ந்தார். இதனை உயர்த்தித் தர வேண்டிய பொறுப்பு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே இருந்தது. ஆனால், அதனை அவரிடம் முறையிடவும், கூடுதல் பணம் பெற்றுத் தரவும் யாரும் தயாராக இல்லை.
எனவே, இந்த பணம் பெறுவதற்காக முதல்வரை சந்திக்க முடிவு செய்தார். உடனே அதிகாரிகளும், அதிகாரிகளும் மேயர் சைதை துரைசாமியை தடுக்கும் முயற்சியில் இறங்கினார்கள். அதாவது, மேயராக ஒரு கடிதம் எழுதினால் போதும், நேரில் சந்தித்துக் கேட்டால் அம்மா கோபமாகிவிடுவார், தேவையற்ற வீண் விளைவுகள் உருவாகலாம். எனவே, கடிதம் மட்டும் போதும் என்று எச்சரிக்கை விடுத்தார்கள்.
ஆனால், மேயர் சைதை துரைசாமி அதனை ஏற்கவில்லை. ஏனென்றால் அரசு கோப்புகள் எத்தனை வேகத்தில் நகரும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். மேலும், முதல்வர் பற்றியும் நன்கு அறிவார். எனவே, நேரில் சந்தித்து முறையிட்டு நிதி கேட்கும் முடிவுக்கு வந்தார்.
முதல்வரை சந்திப்பதற்கு முன் தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டு போனார். ஏனென்றால், முதல்வர் ஜெயலலிதா நிதி நிர்வாகத்தில் கில்லாடியாக செயல்படுவார். எந்த நேரத்தில் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்பார் என்று சொல்லவே முடியாது. எனவே, முழுமையான தகவல்களுடன் முதல்வரை மேயர் சைதை துரைசாமி தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.
மேயர் சைதை துரைசாமி ஒருபோதும் சொந்தப் பிரச்னைக்காக சந்திக்க மாட்டா என்பது ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும். எனவே, மேயர் சைதை துரைசாமி என்ன சொல்கிறார் என்று முழுமையாகக் கேட்டுக்கொண்டார்.
அதற்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா..?
- நாளை பார்க்கலாம்.