• Home
  • அரசியல்
  • அஜித்தை கருணாநிதி மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கலையா..?

அஜித்தை கருணாநிதி மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கலையா..?

Image

கனிமொழிக்கு பா.ஜ.க. கேள்வி

கோவை தொழிலதிபரை ஹோட்டல் ரூமுக்கு வரவழைத்து பா.ஜ.க.வினர் மிரட்டியதற்கு தி.மு.க. எம்.பி.யான கனிமொழி, ஒரு திருக்குறள் மூலம் கொட்டு வைத்திருக்கிறார்.

அதாவது, ‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ – குறள் 978, அதிகாரம் 98 – ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்.’ என்று புதுவிதத்தில் கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு பா.ஜ.க.வினர் கடுமையான பதிலடி கொடுத்துவருகிறார்கள். விழாவுக்கு நடிகர்கள் வந்தே ஆகவேண்டும் என்று மிரட்டுகிறார்கள், இதை நீங்கள் தான் கண்டிக்க வேண்டும் என்று முதல்வராக இருந்த கருணாநிதிக்கு மேடையிலே கோரிக்கை வைத்தார் நடிகர் அஜித்.

இதற்காக அடுத்த நாள் அஜித் கருணாநிதியை நேரில் சந்தித்து விளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது. அஜித் காரை ரோட்டிலேயே நிறுத்திவிட்டு நடந்துவந்து சந்திக்க வைத்தார்கள். அப்போது அஜித்தை மிரட்டி வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்தபோது சுய மரியாதை சீண்டப்படவில்லையா..?

“Bus ஓசி” என சொன்னபோது தமிழர்களின் சுயமரியாதை சீண்டப்படவில்லையா மேடம்.

 கொடுத்து மனுவை வைத்தே மண்டையில் தங்கள் அமைச்சர் அடித்த போது தமிழர்களின் சுயமரியாதை சீண்டப்படவில்லையா மேடம்

தமிழர்களை படுகொலை செய்ய உதவிய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்போது தமிழர்களின் சுயமரியாதை சீண்டப்படவில்லையா மேடம்

ஆர்.எஸ். பாரதி அருவருப்பாகபேசியபோதும் தாழ்த்தப்பட்ட மக்களை நிற்க வைத்தே பேசியபோதும் தமிழர்களின் சுயமரியாதை சீண்டப்படவில்லயா மேடம்’’ என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

Leave a Comment